ETV Bharat / bharat

உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்! - uttarkhand Assembly UCC Bill Passed

உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 6:39 PM IST

Updated : Feb 8, 2024, 8:32 PM IST

டேராடூன் : உத்தரகாண்ட் சட்டபேரவை கூட்டத்தில் முதலமைச்சர் தாக்கல் செய்த பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. நாட்டின் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் சட்டப் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. உத்தரகாண்டை தொடர்ந்து மற்ற மாநிலங்களும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் உத்தரகாண்ட் சட்டப் பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி மாநில சட்டசபையில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பொது சிவில் சட்ட (Uniform Civil Code - UCC) மசோதாவை தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து மசோதாவை படித்து புரிந்து கொள்ள கால அவகாசம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் பல உறுப்பினர்கள் இதை பரிசீலிக்க விரும்பியதால், இந்த மசோதா மீதான விவாதம் (இன்று பிப். 7) தொடர்ந்து நடைபெற்றது.

மசோதா மீதான உரையில் பேசிய முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, உத்தராகண்ட் சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பொது சிவில் சட்டம், உத்தரகாண்ட், 2024 மசோதா, திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, லிவ்-இன் உறவுகள் ஆகியவற்றை மட்டுமே குறிக்கிறது. உத்தராகண்ட் மாநிலத்தில் வசிக்கும் அனைத்து சாதி, மதத்தினருக்கும் இது பொருந்தும் என்று மசோதா தெளிவாகக் கூறுகிறது.

மத்திய அல்லது மாநில அரசு ஊழியர்களுக்கும் இது பொருந்தும். மாநில அல்லது மத்திய அரசின் திட்டங்களின் பயனாளிகளுக்கும் இது பொருந்தும்து. ஆனால், பட்டியல் பழங்குடியின மக்கள் இந்த மசோதாவின் வரம்பிற்குள் வரமாட்டார்கள் என்று தெரிவித்தார். மேலும், இந்தியா மிகப் பெரிய நாடு ஆனால் வரலாறு படைத்து முழு நாட்டிற்கும் வழிகாட்டும் வாய்ப்பை நமது மாநிலம் பெற்றுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் கண்ட கனவு, மண்ணில் இறங்கி நனவாகப் போகிறது. மற்ற மாநிலங்கள் நாடும் அதே திசையில் செல்ல வேண்டும். நாம் சரித்திரம் படைக்கப் போகிறோம் என்று சட்டப் பேரவையில் மசோதா மீதான விவாதத்தில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கூறினார்.

தொடர்ந்து மசோதா குரல் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டது. இந்நிலையில், மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : பாகிஸ்தானில் அரசியல் கட்சி அலுவலகம் உள்பட 2 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்! - 24 பேர் பலி!

Last Updated : Feb 8, 2024, 8:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.