ETV Bharat / bharat

வியப்பு ஆனால் உண்மை; உ.பி.யில் 40 நாட்களில் ஏழு முறை பாம்பு கடிக்கும் ஆளான அதிசய இளைஞர்! - UP Youth snake bite - UP YOUTH SNAKE BITE

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, கடந்த 40 நாட்களில் ஏழு முறை பாம்பு கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு முறை சிகிச்சைக்கு பிறகும் அவர் உயிர் பிழைத்த நிலையில், தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதை அறிந்து அவரது பெற்றோர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

சித்தரிப்பு கோப்புப் படம்
சித்தரிப்பு கோப்புப் படம் (Image Credit - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 7:55 PM IST

பதேபூர் (உ.பி.): உத்தரப் பிரதேச மாநிலம், பதேபூர் மாவட்டத்தின் மல்வான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சௌரா கிராமத்தில் தமது பெற்றோருடன் வசித்து வரும் இளைஞர் விகாஸ் திவேதி. பாம்பு கடிக்கு ஆளான இவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 34 நாட்களில் ஆறு முறை பாம்பு கடிக்கு ஆளான திவேதி, தற்போது ஏழாவது முறையாக மீண்டும் பாம்புக்கு இலக்காகி உள்ளார்.

"ஒவ்வொரு முறை அவரை பாம்பு கடிக்கும்போதும் சிகிச்சைக்கு ஒரே மருந்து தான் தரப்படுகிறது. அதில் அவர் குணமடைந்து வீடும் திரும்பி உள்ளார். ஆனால் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் அவரை தொடர்ந்து பாம்பு கடித்து வருவது உண்மையிலேயே வியப்பாக உள்ளது" என்று விகாஸ் திவேதிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் கூறியுள்ளார்.

இதனிடையே "ஒவ்வொரு முறை தம்மை பாம்பு கடிப்பதற்கு முன் விகாஸ் அபசகுணமாக ஏதாவது உணர்வார் என்றும், அவரை பாம்பு கடித்தால் அது சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையாக தான் இருக்கும்" எனவும் அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.

மேலும், விகாஸை ஆறாவது முறையாக பாம்பு கடித்த பிறகு, "தமது கனவில் பாம்பு தோன்றியதாகவும், அது தன்னை ஒன்பதுமுறை கடிக்கும் எனவும், ஒன்பதாவது முறை கடித்தபின் தம்மை யாராலும் காப்பாற்ற முடியாது என்று அது எச்சரித்தது" என்றும் அவன் தங்களிடம் கூறியதாகவும் விகாசின் பெற்றோர் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

விகாஸின் கனவில் தோன்றி. ஒன்பது முறை கடிப்பதாக பாம்பு கூறியிருந்த நிலையில், கடந்த 40 நாட்களில் தொடர்ந்து ஏழாவது முறை அவரை பாம்பு கடித்துள்ளதுதான் அவரது பெற்றோரின் கவலைக்கு காரணம்.

இதையும் படிங்க: டிடிஎப் வாசனின் திருப்பதி கோயில் பிராங் வீடியோ: தேவஸ்தனம் அதிரடி முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.