கான்பூர் தேஹாத் (உத்தரப்பிரதேசம்): கான்பூர் தேஹாத், ரானியாவில் உள்ள மெத்தை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் நேற்று (செப்.21) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, அக்கம்பக்கத்தினர் இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள், தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை அணைத்து உள்ளே சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், அதிக அளவில் காயமடைந்த ராம்சங்கரின் மகன் சுமித், சுட்டனின் மகன் விஷால், ஷியாம்லால் மகன் சுரேந்திரா, ஷியாம்லால் மகன் ரோஹித், ராம்சங்கரின் மகன் சிவம், கமலேஷின் மகன் ரவி ஆகிய ஆறு தொழிலாளர்களையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் ஆறு பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டன.
இதையும் படிங்க: பெண்ணை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி ஃபிரிட்ஜில் அடுக்கிய நபர்.. டெல்லி பாணியில் பெங்களூருவில் நடந்த பகீர் சம்பவம்!
மேலும் இந்த விபத்து குறித்து கான்பூர் தேஹாத் காவல் கண்காணிப்பாளர் பிபிஜிடிஎஸ் மூர்த்தி மற்றும் மாவட்ட அதிகாரி (DO) அலோக் குமார் சிங் கூறுகையில், "இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் 15 தொழிலாளர்கள் இரவுப் பணியில் தொழிற்சாலையில் இருந்துள்ளனர். காலை 7.15 மணியளவில் இந்த தீ விபத்து நடந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையின்படி, இயந்திரம் ஒன்றில் இருந்து திடீரென தீப்பிடித்து, தீப்பொறி பரவியுள்ளது. தொழிலாளர்கள் அதை அணைக்க முயற்சி செய்த போதிலும், அது விரைவில் வெகுதூரம் பரவி, தீப்பிழம்புகள் மற்றும் மெத்தைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் எரியக்கூடிய மூலப் பொருட்கள் மீது பரவி அதிகமாக எரியத் தொடங்கியுள்ளது.
இத்தகையச் சூழலில், இந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் தீக்காயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தொழிற்சாலை மேற்பாற்வையாளர் தலைமறைவாகியுள்ள நிலையில், விரைவில் அவரைக் கண்டுபிடித்து, யாருடைய கவனக்குறைவால் இந்த தீ விபத்துக்கு வழிவகுத்தது என்பது கண்டறியப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.