ETV Bharat / bharat

கணிக்க முடியாத மாநிலங்கள்? வெற்றி வாகை சூடப்போவது பாஜகவா? காங்கிரசா? - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது. இந்நிலையில், எந்த கட்சி வெற்றி பெறும் எனக் கணிக்க முடியாத சூழலில் உள்ள மாநிலங்களின் நிலவரம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்...

Etv Bharat
PM Modi -Amit Shah- Rahul Gandhi (File Photo: Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 4, 2024, 7:41 AM IST

ஐதராபாத்: 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றன. மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன்.4) எண்ணப்படுகின்றன. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களான ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம், பஞ்சாப் மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் பாஜக கணிசமான இடங்களை கைப்பற்றும் எனக் கூறப்பட்டது.

கணிக்க முடியாத மாநிலங்களாக கருதப்படும் இந்த மாநிலங்களின் நிலவரம் குறித்து இந்த செய்தியில் காணலாம்.

கர்நாடகா: காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முக்கியத்தக்க மாநிலமாக காணப்படுவது கர்நாடகா. அங்கு வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் பாஜக 25 தொகுதிகள் வரை கைப்பற்றக்கூடும் எனக் கூறப்பட்டது. இந்தியா டுடே மற்றும் ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளில் கர்நாடகாவில், பாஜக கூட்டணி 23 முதல் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி 3 முதல் 5 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனங்கள் கணித்துள்ளது. முன்னதாக கடந்த 2019 ஆண்டு மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் பாஜக 25 தொகுதிகளை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 1 இடத்தில் வென்றிருந்தது. தற்போது மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

டெல்லி: தலைநகர் டெல்லியை பொறுத்தவரை அங்குள்ள மக்களின் தொலைநோக்கு என்பது மற்ற மாநில மக்களை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டதாக காணப்படும். மாநிலத்தின் ஆட்சிக்கு ஆம் ஆத்மி, மத்தியில் ஆட்சிக்கு பாஜக என்பதையே கொள்கையாக கொண்டவர்கள எனக் கூறலாம்.

அந்த வகையில் 2024 மக்களவை தேர்தலில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜகவிற்கு சாதகமாக அமைந்துள்ளன. ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகளின் படி டெல்லியில் பாஜக 6 முதல் 7 இடங்களை கைப்பற்றும் என்றும் இந்தியா கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்கப் போவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் டுடே சாணக்கியா நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளில் பாஜக 6 இடங்கள் வரை கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 42 மக்களவை தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களையும் பாஜக 18 தொகுதிகளையும் கைப்பற்றின. காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களை மட்டுமே வென்றிருந்தன.

இந்நிலையில், 2024 மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டுள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளன. நியூஸ்18 சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 21 முதல் 24 இடங்களை கைப்பற்றும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் 18 முதல் 21 இடங்களை மட்டுமே கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் டுடே சாணக்யா நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் பாஜக 24 இடங்களையும், திரிணாமுல் காங்கிரஸ் 17 இடங்களை மட்டுமே கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா: மொத்தம் உள்ள 48 மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 31 இடங்களையும், இந்தியா கூட்டணி 18 இடங்கள் வரையும் கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டாக பிரிந்து முதல் முறையாக தேர்தலை எதிர்கொள்கின்றன.

இதில் மூத்த தலைவர்கள் உத்தவ் தாக்ரே, சரத் பவார் ஓரணியில் இணைந்து உள்ள நிலையில். தேர்தல் கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுமா என்ற பெருத்த எதிர்பார்ப்பு அங்கு நிலவுகிறது. PMARQ கருத்து கணிப்புகளின் படி தேசிய ஜனநாயக கூட்டணி 29 இடங்களையும், இந்தியா கூட்டணி 19 இடங்களையும் கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

IPSOS கருத்து கணிப்பு NDA கூட்டணி 34 இடங்களும், INDIA கூட்டணி 17 இடங்களும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக 30 இடங்களையும், இந்தியா கூட்டணி 18 இடங்களையும் கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.

பஞ்சாப்: விவசாயிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பஞ்சாப் மக்களவை தேர்தலை பாஜக எதிர்கொண்டுள்ளது. மொத்தம் உள்ள 13 மக்களவை தொகுதிகளில் பாஜக 2 இடங்களை கூட கைப்பற்றுவது கடினம் தான் எனக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் ஆம் ஆத்மி 3 முதல் 4 இடங்களையும், காங்கிரஸ் 5 முதல் 6 இடங்கள் வரை கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், பாஜகவுக்கு இந்த முறை பஞ்சாப்பில் பின்னடைவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. தேர்தல் கருத்துக் கணிப்புகளை கட்சிகள் பொய்யாக்குமா? அல்லது தேர்தல் கருத்துக் கணிப்புகள் மெய்ப்பிக்குமா? என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிய வரும்.

இதையும் படிங்க: LIVE: யாருக்கு மகுடம்? மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவுகள் நேரலை! - Lok Sabha Election Results 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.