டெல்லி: தமது உடல் நிலை குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும், வயது மூப்பு காரணமாக பரிசோதனையில் ஈடுபட்டு உள்ளதாகவும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் கவுரவ தலைவரும், மூத்த தொழிலதிபருமான ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் கவுரவ தலைவர் ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பாக இன்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் "என்னை பற்றி சிந்தித்தற்கு நன்றி" என்று தலைப்பிட்டு ரத்தன் டாடா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியான வதந்தி செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை.
Thank you for thinking of me 🤍 pic.twitter.com/MICi6zVH99
— Ratan N. Tata (@RNTata2000) October 7, 2024
என்னுடைய வயது மூப்பு அடிப்படையிலான மருத்துவ சூழல் காரணமாக வழக்கமான மருத்துவப் பரிசோதனையில் உள்ளேன். என்னைப் பற்றி கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நான் தொடர்ந்து நல்ல உணர்வுடன் உள்ளேன். பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.