பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பரமேஷ் என்பவர் 42 பெங்களூரு பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 3 அன்று சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் உடன் ஒப்பிட்டு பேசியிருந்தார்.
இவ்வாறான உதயநிதியின் பேச்சு சமூகத்தில் அமைதியின்மையையும், கிளர்ச்சியையும் தூண்டுவதாகத் தெரிகிறது. இதனைப் படித்தவர்கள் எனது மதத்திற்கு எதிராகப் பேசினார்கள். இது எனது மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. எனவே, உதயநிதி ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரி இருந்தார்.
இந்த நிலையில், இந்த மனு தொடர்பாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் மார்ச் 4 அன்று நேரில் ஆஜராக வேண்டும் என பெங்களூரு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. மேலும், சனாதன ஒழிப்பு மாநாட்டை ஒருங்கிணைத்த எஸ் வெங்கடேஷ், மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் ஆதவன் தீச்சன்யா ஆகியோருக்கும் பெங்களூரு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
இதையும் படிங்க: “தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றல்” - நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இடங்களில் நடத்தப்பட்ட சோதனைக்கு என்ஐஏ விளக்கம்!