ETV Bharat / bharat

உதயநிதியின் சனாதன தர்மம் கருத்து தவறானது.. அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்" - தெலங்கானா முதலமைச்சர்! - Revanth reddy santan dharma issue

சனாதன தர்மம் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் தண்டிக்கப்பட வேண்டும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 12:37 PM IST

டெல்லி : பிரபல தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, சனாதனம் தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட கருத்து தவறானது. அது அவரது நிலைப்பாடு. சனாதன தர்மம் குறித்து வெளியிட்ட கருத்துக்கு அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், திமுகவுடன் கூட்டணியில் உள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரே குடும்பத்தில் உள்ள தனிநபர்களுக்கு மாறுபட்ட கருத்து உள்ளது போல் சனாதன தர்மம் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கருத்து அவருடையது என்றார்.

மேலும், தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவராகவும், முதலமைச்சராகவும் இந்த விவகாரம் குறித்து தான் கூறுகையில், சனாதன தர்மம் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினின் கருத்து முற்றிலும் தவறானது. அதற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். மேலும் உதயநிதி ஸ்டாலின் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்திய நாடு என்றும் மத உணர்வுகளை மதித்து, அதற்கு தீங்குவிளைவிக்காமல் அனைவரின் நம்பிக்கைகளையும் நிலைநிறுத்துவதே முக்கியம் என்றும் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார். மேலும் பாஜகவின் 400 இடங்களில் வெற்றி என்ற முழக்கம் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொள்ள பொருத்தமாக இருக்கும் நேரடி அரசியல் களத்தில் அதனால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.

மக்களவையில் 400 இடங்களை பாஜக பெற வேண்டும் என்றால் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வாக்கு கேட்க வேண்டும் என்றார். ராஜஸ்தானில் 25 இடங்கள், குஜராத்தில் உள்ள 26 இடங்கள், அரியானாவில் 10 இடங்கள், டெல்லியில் உள்ள 7 இடங்கள், பீகாரில் 39 முதல் 40 இடங்கள், உத்தர பிரதேசத்தில் 62 இடங்கள், மேற்கு வங்கத்தில் 18 இடங்கள் என வட மாநிலங்களில் பாஜக குறிப்பிடத்தக்க வகையில் வெற்றியை குவித்தாலும் அவர்களால் 300 இடங்களை தான் கைப்பற்ற முடியும் என்றும் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் டெங்கு, மலேரியா, கரோனா ஆகியவற்றை போல் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வடமாநிலங்களில் பலர் கண்டனங்கள் எழுப்பினர். மேலும் இந்த விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நீதிமன்றங்களில் பலர் வழக்கு தொடர்ந்தனர். கர்நாடக, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குகளில் சம்மன் அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது.

அதேநேரம் தனக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் விசாரிக்க உத்தரவிடக் கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனு குறித்த விசாரணையும் நிலுவையில் உள்ளது.

இதையும் படிங்க: உத்தரகாண்டின் உயரம் குறைந்த பெண்! ஜனநாயக கடமை ஆற்றினார்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.