கொல்கத்தா : விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சிகள் தங்களது வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அண்மையில் 195 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி 39 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது.
இந்நிலையில், மேற்கு வங்கம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்து அலோசிக்கப் போவதில்லை என தெரிவித்து இருந்த ம்மதா பானர்ஜி, மொத்தமுள்ள 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளார்.
-
Then Trinamool Congress workers showed that Trinamool Congress workers are with @MamataOfficial and @abhishekaitc.#jonogorjon#khelahobe pic.twitter.com/poYk8QX8hN
— Ankan Sen (@ankansenaitc) March 10, 2024
கொல்கத்தா பிரிகேட் பரேட் மைதானத்தில் நடந்த பேரணியில் தோன்றிய மம்தா பானர்ஜி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். முன்னணி நடிகர் நுசரத் ஜஹானுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பேனர்ஜி வெளியிட்டார்.
இதில் டைமண்ட் ஹார்பர் தொகுதியில் அபிஷேக் பானர்ஜி போட்டியிட உள்ளார். அவரைத் தொடர்ந்து இந்திய அனியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பஹரம்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி மஹுவா மொய்த்ராவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
அவர் கிருஷ்ணாநகர் தொகுதியில் களமிறங்க உள்ளார். நடிகர் சத்ருஹன் சின்ஹா அசன்சோல் தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்தியா கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்பது சந்தேகத்திற்கு உரிய வகையிலே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதை தவிர்த்து ஒட்டுமொத்த தொகுதிகளுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 18 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றன. அதேநேரம் கடந்த 2014 மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 34 இடங்களை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் வேட்புமனு வாபஸ் பெறும் நாள் அன்று கூட கூட்டணி இறுதியாகலாம் என காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க : ஆஸ்கர் விருது விழா: இந்தியாவில் எப்போது.. எப்படி பார்ப்பது? முழுத் தகவல்!