டெல்லி: கேரள அரசு முல்லை பெரியாறு பகுதியில் மிகப் பெரிய கார் பார்க்கிங் கட்டுவது தொடர்பாக, சர்வே ஆஃப் இந்தியா சமர்ப்பித்த அறிக்கையை கண்டித்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற ஜூலை 10ஆம் தேதிக்குள் தீர்வு காணவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிபதி அபய் ஸ்ரீநிவாஸ் ஓகா தலைமையிலான அமர்வும் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் வி.கிருஷ்ணமூர்த்தி, பி.வில்சன், ஜி.உமாபதி மற்றும் வழக்கறிஞர் டி.குமணன் ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது, கேரள அரசு முல்லை பெரியாறு அணை பகுதியில் கார் பாக்கிங் கட்டுவது தொடர்பாக சர்வே ஆஃப் இந்தியா அளித்துள்ள ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழக அரசு தரப்பில் தக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான அந்த மனுவில், "கடந்த 1924ஆம் அண்டு நீர்வளத்துறை தயாரித்த வரைப்படத்தை ஆய்வுக்குழு கணக்கில் கொள்ளவில்லை. கேரள அரசு கட்டிவரும் வாகன நிறுத்துமிடத்தின் தரைத்தளம் எங்கு உள்ளது என்பதையும் இந்த ஆய்வுக்குழு ஆய்வு செய்யவில்லை. குறிப்பாக, வாகன நிறுத்துமிடத்தின் எல்லை நிர்ணயிக்கப்பட்ட போது, தமிழக அரசின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
வாகன நிறுத்துமிடத்தில் உணவகம், வாகன பேட்டரி சார்ஜ் செய்யும் இடம் உள்ளிட்டவை உள்ளடங்கும். எனவே, வாகன நிறுத்தும் இடத்தை அளவிடும் போது, அதன் சார்பு வசதிகளைக் கொண்ட பகுதிகளை கணக்கில் கொள்ள, சர்வே ஆஃப் இந்தியா குழு தவறிவிட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கேரள அரசு 'மெகா கார் பார்க்கிங்' திட்டம், கடந்த 1886 ஆம் ஆண்டு பெரியாறு ஏரி குத்தகை ஒப்பந்தத்தில் கீழ் உள்ள இடத்தில் உள்ளதா, என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சர்வே ஆஃப் இந்தியாவிற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மேலும், முல்லை பெரியார் அணை பகுதியில் கார் பார்க்கிங் கட்ட கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், மெகா கார் பார்க்கிங் திட்டம் நீர்நிலைப் பகுதியில் வருவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு கேரள அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பாங்காக் பயணியின் பையில் 10 அனகோண்டா - மிரண்டு போன சுங்கத் துறை! என்ன நடந்தது?