திருப்பதி: திருமலை திருப்பதி கோயிலுக்கு நண்பர்களுடன் சென்று இருந்த பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன், சாமி தரிசனத்திற்காகா காத்திருந்த பக்தர்களை ஏமாற்றுவது போல் பிராங்க செய்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில், சாமி தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் மூன் கோயில் ஊழியர்கள் போல் தோன்றிய டிடிஎப் வாசன் மற்றும் அவரது நண்பர் காத்திருப்பு அறையின் கதவை திறக்க முயல்கின்றனர்.
Hurting sentiments of devotees with prank videos is a despicable act - TTD
— Tirumala Tirupati Devasthanams (@TTDevasthanams) July 11, 2024
Legal action against such persons. pic.twitter.com/ejtA8UCeio
தங்களது காத்திருப்பு நேரம் நிறைவடைந்து விட்டது. அறைக் கதவு திறக்கப்படுகிறது என நினைத்த பக்தர்கள் அனைவரும் உடனடியே எழுந்து நின்று கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு பக்தர்களின் பரவச அலை வீசத் தொடங்கியது.
இந்த வீடியோவை திருப்பதி ஃபன்னி வீடியோ என்ற தலைப்பில் தனது சமூக வலைதள பக்கத்தில் டிடிஎப் வாசன் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், பல்வேறு தரப்பினரும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திருப்பதி தேவஸ்தனம் போர்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.
டிடிஎப் வாசனின் செயலுக்கு கணடனம் தெரிவித்துள்ள திருப்பதி தேவஸ்தனம் போர்டு, அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக டிடிஎப் வாசன் மீது போலீசில் புகார் அளிக்க உள்ளதாக தேவஸ்தன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் டிடிஎப் வாசன், அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை செலுத்தி விபத்து ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தால் 10 ஆண்டுகளுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கார் ஓட்டும் போது செல்போன் பேசியதாக போலீசாரால் மீண்டும் வாசன் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இருந்து அவர் நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் அவர் சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர் சர்ச்சைகளில் சிக்கிய போதிலும் டிடிஎப் வாசனை சமூக வலைதளங்களில் பின் தொடர்வோரின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் இருப்பது கூடுதல் தகவல்.
இதையும் படிங்க: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்! மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! - Arvind Kejriwal bail