டெல்லி : முதல் கட்ட மக்களவை தேர்தல் நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் ஆர்வமாக தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். காலை 11 மணி நிலவரப்படி நாட்டிலேயே திரிபுராவில் 34 புள்ளி 54 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
அதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் 33 புள்ளி 56 வாக்குகளும், மேகாலயாவில் 33 புள்ளி 12 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இதற்கு அடுத்த படியாக மத்திய பிரதேசத்தில் 30 புள்ளி 56 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மிகவும் குறைவாக லட்சத்தீவில் 16 புள்ளி 33 சதவீத வாக்குகளே பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் - 21.82 சதவீதம், அருணாச்சல பிரதேசத்தில் - 18.74 சதவீதம், அசாமில் - 27.22 சதவீதம், பீகாரில் - 20.42 சதவீதம், சத்தீஸ்கரில் - 28.12 சதவீதம், ஜம்மு காஷ்மீரில் - 22.60 சதவீதம், மகாராஷ்டிராவில் - 2 சதவீதம் - 19.17 சதவீதம், மேகாலயா - 33.12 சதவீதம், மிசோரம் - 26.56 சதவீதம், நாகாலாந்து - 22.82 சதவீதம் பதிவாகி உள்ளது.
புதுச்சேரி - 28.10 சதவீதம், ராஜஸ்தான் - 22.51 சதவீதம், சிக்கிம் - 21.20 சதவீதம், தமிழ்நாடு - 23.72 சதவீதம், திரிபுரா - 34 சதவீதம் , உத்தரபிரதேசம் - 25.20 சதவீதம், உத்தரகாண்ட் 24.83 சதவீதம் முறையே வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில், ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், 2024 மக்களவை தேர்தலில் எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகும் என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மக்களவை தேர்தல் விறுவிறுப்பு: ஜனநாயக கடமை ஆற்றிய கின்னஸ் சாதனை பெண் ஜோதி ஆம்கே! - Lok Sabha Election 2024 Phase