டெல்லி : கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் புதிதாக இயற்றப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களும் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் நாட்டில் நடைமுறைக்கு வர உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய ஷாக்சியா, பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா ஆகிய சட்டங்கள் இயற்றப்பட்டன.
கடந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி அரசு கெஜட்டில் இந்த மூன்று சட்டங்களும் இயற்றப்பட்டது தொடர்பான அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மூன்று சட்டங்களும் ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி பெறும்.. நாடாளுமன்றத் தேர்தல் வியூகத்தை பிரத்யேகமாக அளித்த சிவராஜ் சிங் சவுகான்!