ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவருக்கு கடந்த அக்டோபர் 14ஆம் தேதி நள்ளிரவு தெரியாத எண்ணில் இருந்து வீடியோ கால் வந்துள்ளது. அதற்கு பதிலளித்த நிலையில், வீடியோ காலின் எதிர் முனையில், ஒரு பெண் நிர்வாணமாகத் தோன்றியதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எம்எல்ஏ, வீடியோ காலை உடனடியாக துண்டித்துள்ளார். இந்த கால், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த திட்டமிடப்பட்ட சதியா அல்லது தற்செயலாக நடந்ததா என சந்தேகம் அடைந்த எம்எல்ஏ, தேசிய சைபர் கிரைம் ரிப்போர்டிங் போர்டலில் (National Cybercrime Reporting Portal) புகாரை பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: 'இப்போ 22 வயசு.. இனிமேலும் தள்ளி போட முடியாது'.. ஐதராபாத் வீணா-வாணி பெற்றோர் வேதனை..!
இந்த வீடியோ மூலம் மிரட்டல் அல்லது அவதூறு ஆகியவை ஏற்படலாம் என்று கடந்த வியாழக்கிழமை தெலங்கானா சைபர் கிரைம் செக்யூரிட்டி பியூரோவில் (TGCSB - Telangana Cyber Security Bureau) எழுத்துப்பூர்வமான புகாரை அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தெலங்கானா சைபர் கிரைம் செக்யூரிட்டி பீரோ தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வீடியோ கால் வந்த எண் யாருடையது?, இதற்கு பின்னால் உள்ளவர்கள் யார்?, இதன் பின்னால் தீங்கிழைக்கும் நோக்கம் ஏதேனும் உள்ளதா உள்ளிட்ட கோணங்களில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்