ETV Bharat / bharat

வயலுக்குச் சென்ற சிறுமிக்கு 6 சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை.. பீகாரில் ஒரே மாதத்தில் 3வது பாலியல் கொடூரம்! - bihar gang rape - BIHAR GANG RAPE

பீகாரில் வயல் வேலைக்குச் சென்ற சிறுமியை 6 சிறுவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். முதற்கட்டமாக மூன்று பேரை போலீசார் கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2024, 7:04 PM IST

மோதிஹாரி: பீகாரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், வயல் வேலைக்குச் சென்ற சிறுமியை, அதே கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் 6 பேர் ஆளில்லா பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த அந்த சிறுமி, செப்டம்பர் 4ஆம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு வயல் வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது சிறுமியின் பெற்றோர் வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில், வயல் பகுதிக்கு வந்த சிறுமியை, அதே கிராமத்தைச் சேர்ந்த 6 சிறுவர்கள் நோட்டமிட்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, அந்த சிறுமியை ஆளில்லா பகுதியில் வைத்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஆனால், விஷயம் வெளியே தெரிந்தால் மானம் போய்விடும் என நினைத்த கிராமத்தினர், இதை வெளியில் சொல்லாமல் மறைத்துள்ளார்.

இதையும் படிங்க: நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த ஸ்ருதி.. கடைசி துணையாக இருந்த காதலனும் விபத்தில் பலி.. கேரளாவில் மற்றொரு துயரம்!

செப்டம்பர் 4ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோரும் புகார் அளிக்காமல் இருந்த நிலையில், சிறுமியின் தந்தை பிஜ்தாரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

போலீசார், சிறுமியின் கிராமத்துக்குச் சென்று விசாரணை நடத்தி, முதற்கட்டமாக வன்கொடுமை செய்தவர்களில் மூன்று சிறுவர்களை கைது செய்து, அவர்கள் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள மற்ற மூன்று பேரை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பீகாரில் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி கயா மாவட்டத்தில் 6 வயது சிறுமியை இரண்டு பேர் சேர்ந்து கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல, செப்டம்பர் 11ஆம் தேதி நான்கு வயது ஐரோப்பிய சிறுமியை, பக்கத்து வீட்டில் குடியிருந்த 29 வயது கட்டிடத் தொழிலாளி வன்கொடுமை செய்து கைதானார். அதன் தொடர்ச்சியாக பீகாரில் ஒரே ஊரை சேர்ந்த சிறுமி 6 சிறுவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.