கேரளா: ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக, மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பது குற்றம் இல்லை எனக் கூறி திருச்சூர் சித்தாட்டுகராவில் உள்ள தனியார் பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீதான புகாரை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திருச்சூரில் இயங்கி வரும் தனியார் பள்ளி மாணவர்கள், கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி வகுப்பு இடைவேளையின் போது, சாப்பிட்டும் பாட்டுபாடியும் இருந்துள்ளனர். இந்த செயலுக்காக 5 மாணவர்கள் பள்ளி தலைமையாசிரியர் அறைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர்களை கன்னத்தில் அடித்ததாக பாவராட்டி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த புகாரை ரத்து செய்யக்கோரி பள்ளி தலைமையாசிரியரும், துணை முதல்வரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஏ.பதருத் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மருத்துவ பரிசோதனையில் மாணவர்களுக்கு உட்புற மற்றும் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை எனக்கூறி வழக்கை ரத்து செய்தது.
மேலும், பள்ளியில் ஒழுக்கத்தை நிலைநாட்டுவதற்காக மாணவர்களை அடித்தாலும், அதை கடுமையான குற்றமாக கருத முடியாது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்