ஹைதராபாத்: இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி, 15 மாநிலங்களில் ஓய்வு பெறும் 56 ராஜ்யசபா உறுப்பினர்களுக்குப் பதிலாக இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை ராஜ்யசபாவிற்கு தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ராஜ்யசபாவின் ஒவ்வொரு உறுப்பினர்களும் ஆறு வருட காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 83-ன் கீழ் 1-வது பிரிவின் படி, மாநிலங்கள் கவுன்சில் (ராஜ்யசபா) கலைப்புக்கு உட்பட்டது அல்ல. ஆனால், அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒவ்வொரு இரண்டாவது வருடமும் ஓய்வு பெறுவார்கள். பிறகு இந்த முறையானது மாற்றப்பட்டு, ஆறு ஆண்டுகளில் மூன்று முறைக்கு மேல் ராஜ்யசபாவுக்குத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
அரசியலமைப்புத் திட்டம் மற்றும் யதார்த்தம்: கடந்த ஆண்டுகளில், ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவதற்குள், பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட, குடியரசுத் தலைவர் ஆட்சி காரணமாகவும் மற்றும் மாநிலச் சட்டசபைகள் கலைக்கப்பட்டதன் காரணமாகவும் இதுபோன்ற நிகழ்வு நடந்துள்ளது.
ராஜ்யசபாவிற்கு இருபதாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கவிருந்தபோது சில மாநிலச் சட்டசபைகள் கலைக்கப்பட்ட நிலையிலிருந்தன. ஆகவே, அந்த மாநிலங்களின் ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல்கள் பின்னர் நடத்தப்பட்டன. இந்த மாற்றங்கள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் அட்டவணையில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 80-ன் அடிப்படையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 238 பிரதிநிதிகளுக்கு மிகாமல், இந்தியக் குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட 12 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்கள், மாநிலங்களவைக்கு வழங்குகிறது.
அனுமதிக்கப்பட்ட 250 உறுப்பினர்களில், தற்போது ராஜ்யசபாவில் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில், அரசியலமைப்பின் 4வது அட்டவணையில் விவரிக்கப்பட்டுள்ளபடி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 233 ஆக தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் காலியான ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான இடங்களை நிரப்புவதற்காக அறிவிப்புகள் வெளியிடப்படும்.
தேர்தல் முறை: பிரிவு 80ன் கீழ் 4வது பிரிவின் அடிப்படையில், மாநிலங்களவையில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தின் பிரதிநிதிகளும் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களால், மாற்றக்கூடிய ஒற்றை வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்பது, ஒரு அரசியல் கட்சி மாநிலங்களவையில் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களை ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கும். மீண்டும், மாநில சட்டமன்றத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் வாக்கும் மாற்றத்தக்கது. எனவே, வாக்குச் சீட்டில் குறிப்பிட்டிருக்கும் அனைத்து வேட்பாளர்களின் பெயர்களும் பட்டியலிடப்பட்டு, அவர்களுக்கு எதிராக வாக்காளர்கள் தங்கள் விருப்ப வரிசையைக் குறிப்பிட வேண்டும்.
வாக்காளரான சட்டமன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்களில் ஒருவருக்கு எதிராகக் குறைந்தபட்சம் '1' என்ற எண்ணையாவது குறிப்பிட வேண்டும். அந்த மாநிலத்தில் உள்ள அப்போதைய காலி இடங்களை விடப் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் மட்டுமே அவரது மற்ற விருப்பத்தேர்வுகள் செல்லுபடியாகும்.
மேலும், முதல் சுற்றின்போது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தேவையான வாக்குகளைப் பெறவில்லை என்றால், ஒரு வேட்பாளருக்குத் தேர்ந்தெடுக்கப்படும் குறைந்தபட்ச வாக்குகளின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பதற்கான சூத்திரம் கீழ்க்கண்டவாறு நிர்ணயிக்கப்படுகிறது.
"சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை+1 காலியிடங்களின் எண்ணிக்கை+1"
உதாரணத்திற்கு, உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடக்கவிருக்கும் தேர்தல்களின் சூழ்நிலையைப் பார்க்கலாம், 'மாநிலச் சட்டசபையின் பலம் 403; தேர்தல்கள் திட்டமிடப்பட்ட ராஜ்யசபா இடங்களின் எண்ணிக்கை 10 மற்றும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக, சட்டசபையில் 252 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. மேலே கொடுக்கப்பட்ட சூத்திரத்தின்படி, ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒரு வேட்பாளருக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச வாக்குகள் பின்வருமாறு கணக்கிடப்படுகிறது.
403 +1 = 37.6 (38) 10+1
ஆகவே, பாஜகவால் பரிந்துரைக்கப்படும் ஒவ்வொரு வேட்பாளர்களும் 38 வாக்குகளைப் பெற வேண்டும். சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 252 பலம் இருப்பதால் 6 வேட்பாளர்களை மட்டுமே தனித்துத் தேர்வு செய்ய முடியும். எனவே, குறைந்தபட்சம் 228 (38 x 6) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களில் ஒருவருக்கு அல்லது மற்றவருக்கு வாக்குச் சீட்டில் முதல் முன்னுரிமையைக் குறிக்க ஒரு வாக்குச் சீட்டை வழங்க வேண்டும்.
மீதமுள்ள 24 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் மூலம், அக்கட்சி தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மேலும் ஒரு இடத்தைப் பெற முடியும். இதன் மூலம் 38 என்ற எண்ணிக்கையை அடைய முடியும். பாஜக தனது எஞ்சிய வாக்குகளை அதன் கூட்டணிக் கட்சிகளில் ஒருவரின் வேட்பாளருக்கு விட்டுக்கொடுக்கலாம்.
இந்தியப் பாரம்பரியத்தின் தொடர்ச்சி: அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதங்களின் போது, லோக்நாத் மிஸ்ரா மாநிலங்களவையை "நிதானமான சபை, மறு ஆய்வு மன்றம், தரத்திற்காக நிற்கும் சபை, உறுப்பினர்கள் அவர்களின் நிதானம் மற்றும் சிறப்புப் பிரச்சனைகள் பற்றிய அறிவுக்காக, தாங்கள் கூறுவதைக் கேட்கும் உரிமையைப் பயன்படுத்துவார்கள்." என்று குறிப்பிடுகிறார்.
இதேபோல எம்.அனந்தசயனம் அய்யங்கார், "இத்தகைய பிரதிபலிப்புத் தளத்தில் மக்களின் மேதைமை முழுக்க முழுக்க பங்காற்றக்கூடும்" என்றும் "மக்கள் உரிமையை வெல்ல முடியாத மக்களுக்கு மாநிலங்களவை இடம் கொடுக்கலாம்" என்றும் குறிப்பிடுகிறார்.
மேலும், ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நபர்களும் ஒரே மாதிரியான அனுபவம் கொண்டவர்கள் அல்ல, அவர்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு மதிப்பு சேர்க்கிறார்கள். விமர்சகர்கள் ராஜ்யசபாவுடன் தொடர்புப்படுத்தும் பெரும்பாலான சிக்கல்கள் இந்திய நாடாளுமன்றத்தின் செயல்பாடு பற்றியது.
ஆகவே, அனைத்து நாடாளுமன்ற இடையூறுகளுக்கும், சட்டமன்றப் பணிகள் குறைந்து வருவதற்கும் ராஜ்யசபாவைக் குறை கூறுவது தவறாகும். இந்திய நாடாளுமன்றம் உண்மையான இந்தியப் பாரம்பரியத்தின் தொடர்ச்சி. இது ராஜ்யசபா மற்றும் லோக்சபா ஆகியவற்றின் சிறந்த இணைப்பைக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: மாநிலங்களவை உறுப்பினராகிறார் சோனியா காந்தி! ராஜஸ்தானில் இருந்து போட்டி!