ETV Bharat / bharat

சுவாதி மலிவால் தாக்கப்பட்ட வழக்கு - கெஜ்ரிவால் செயலாளர் கைது - SWATI MALIWAL ASSAULT CASE - SWATI MALIWAL ASSAULT CASE

Swati Maliwal Assault Case: ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சுவாதி மலிவால் தாக்கப்பட்ட வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளர் பிபவ் குமாரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

Swati Maliwal Photo
சுவாதி மலிவால் தாக்கப்பட்ட வழக்கில் நடவடிக்கை (புகைப்படம் சுவாதி மலிவால் , ஏஎன்ஐ) (Credits: ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2024, 12:54 PM IST

Updated : May 18, 2024, 1:39 PM IST

டெல்லி: சுவாதி மலிவாலின் இடது காலிலும், வலது கன்னத்திலும் சிராய்ப்பு காயங்கள் இருந்ததாக வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் இந்த அறிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளர் பிபவ் குமார் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதோடு அவரை கைதும் செய்துள்ளனர்.

முன்னாள் தேசிய மகளிர் ஆணைய தலைவரான சுவாதி மலிவால் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். சொந்த கட்சியின் உறுப்பினரே கட்சிக்கு எதிராக புகார் அளித்திருப்பது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அந்த கட்சியை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

டெல்லி முதலமைச்சரின் வீட்டுக்குச் சென்ற போது, அவருடைய செயலாளரான பிபவ்குமார் தன்னை தாக்கியதாக சுவாதி மலிவால் புகார் கூறியிருந்தார். டெல்லி போலீசாரின் முதல் தகவல் அறிக்கையின் படி, பிபவ் குமார் சுவாதி மலிவாலை கன்னத்தில் அறைந்து, வயிற்றில் எட்டி உதைத்து தாக்கியதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த பிரச்சனை பாஜகவின் சதியென கூறுகிறது ஆம் ஆத்மி கட்சி. இது தொடர்பாக பேசியுள்ள அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆதிஷி கெஜ்ரிவாலை குறிவைப்பதற்காக பாஜகவால் அனுப்பப்பட்ட நபர்தான் சுவாதி மலிவால் என கூறியுள்ளார். மலிவாலின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இதற்கிடையே, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இவ்விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி அளித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட டெல்லி காவல்துறையின் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் சுமார் 4 மணி நேரம் ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி சுவாதி மலிவாலிடம் வாக்குமூலம் பெற்றனர். இதையடுத்து, பிபவ் குமார் தனது வயிற்றில் எட்டி உதைத்ததாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, கெஜ்ரிவாலின் இல்லத்தில் சுவாதி மலிவால் அத்துமீறி நுழைந்து உயர் அதிகாரிகளை மிரட்டியதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அரவிந்த் கெஜ்ரிவாலின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவதற்காக பாஜக சதி செய்திருப்பதாக ஆம் ஆத்மி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

இந்நிலையில், சுவாதி மலிவால் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் டெல்லி முதலமைச்சரின் தனி செயலாளர் பிபவ் குமாரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சுவாதி மலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலிடம் டெல்லி போலீஸ் விசாரணை? - Swati Maliwal Attack Case

Last Updated : May 18, 2024, 1:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.