பெங்களூரு : கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் கடசியின் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடையதாக ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உள்ளது.
-
Obscene videos case: Suspended JD(S) leader Prajwal Revanna remanded to six days police custody https://t.co/t1ZegXN1Ro
— ANI (@ANI) May 31, 2024
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் முன்னதாக இரண்டு பேரை கைது செய்தனர். மேலும், ஜெர்மனிக்கு தப்பியோடிய பிரஜ்வல் ரேவண்ணா இன்று (மே.31) அதிகாலை பெங்களூரு விமான நிலையத்திற்கு விரைந்த நிலையில், அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தனர்.
இதையும் படிங்க: விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! விண்ணில் திக்.. திக்.. நிமிடங்கள்! - Vistara Flight Bomb Threat