ETV Bharat / bharat

ராகுல் காந்தியின் கார் கண்ணாடி மீது கல்வீச்சு! - Stone pelted on Rahul Gandhi car

Bharat Jodo Nyay Yatra: ராகுல் காந்தியின் நியாய யாத்திரை மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து பீகாரில் நுழையும் போது அவரது கார் மீது மர்ம நபர்கள் கல்வீசியதில் கண்ணாடி உடைந்ததது.

Stone pelted on Rahul Gandhi car during Bharat Jodo Nyay Yatra
ராகுல் காந்தியின் கார் கண்ணாடி உடைப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 3:03 PM IST

மால்டா (மேற்கு வங்கம்): காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தியின் கார் மீது மேற்கு வங்கம் மாநிலம் மால்டா பகுதியில் மர்ம நபர்கள் கல்வீசியதில் காரின் கண்ணாடி உடைந்ததாக கூறப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்தியாவின் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் பாரத் ஜோடோ யாத்திரையின் இரண்டாவது கட்டமாக இந்தியாவின் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மணிப்பூரில் இருந்து மகாராஷ்டிரா வரை பாரத் நியாய யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் இருந்து துவங்குவதாக இருந்த இந்த யாத்திரை அனுமதி கிடைக்காததால் தவுபலில் இருந்து ஜனவரி 14ஆம் தேதி துவங்கியது. நியாய யாத்திரை அசாமில் நுழைந்ததில் இருந்து பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டது. நகோன் மாவட்டத்தில் யாத்திரை நுழைந்த போது பாஜகவினர் திரண்டு எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர்.

மேலும், ஜனவரி 22ஆம் தேதி நகோன் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைஷ்ணவ துறவியான ஸ்ரீமந்த சங்கர் தேவ் பிறந்த ஊரானா பட்டதிரவா செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனை அடுத்து ராகுல் காந்தியின் யாத்திரை அசாமின் கவுகாத்தி நகருக்குள் நுழைந்த போது தடுப்புகள் அமைக்கப்பட்டு யாத்திரை தடுக்கப்பட்டது.

நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் நகருக்கு வெளிப்புறமாக செல்லும்படி போலீசார் தெரிவித்தனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதம் தள்ளுமுள்ளுவில் முடிந்தது. இதனையடுத்து ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் மீது அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவின் பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

அசாமை அடுத்து ராகுல் காந்தியின் நியாய யாத்திரை மேற்கு வங்கத்தில் நுழைந்தது. அங்கும் யாத்திரைக்கு சில இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று ராகுல் காந்தியில் யாத்திரை மேற்கு வங்கத்தில் இருந்து பீகார் மாநிலத்தினுள் நுழைந்தது.

அப்போது மேற்கு வங்கம் - பீகார் எல்லையான மால்டா பகுதியில் ராகுல் காந்தி சென்ற வாகனம் மீது கல்வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், “கூட்டத்தின் பின்னால் இருந்து யாராவது கல் வீசி இருக்கலாம். அதனால் போலீசார் அதை கவனிக்காமல் இருந்திருக்கலாம். இது ஒரு சிறிய சம்பவம் தான்” எனத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தினால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

  • #WATCH | On damages to Congress MP Rahul Gandhi's car during his Bharat Jodo Nyay Yatra in Malda (West Bengal), Congress MP Adhir Ranjan Chowdhury says, "Maybe someone at the back pelted a stone amid the crowd...Police force is overlooking that. A lot can happen due to… pic.twitter.com/xHxw2Boi9c

    — ANI (@ANI) January 31, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.