ETV Bharat / bharat

'அனில் அம்பானி இனிமே ஷேர் மார்க்கெட் பக்கம் போகவே கூடாது'; செபியின் அதிரடி நடவடிக்கைக்கு என்ன காரணம்? - sebi ban on anil ambani - SEBI BAN ON ANIL AMBANI

பிரபல தொழிலதிபரான அனில் அம்பானி மற்றும் அவருடன் தொடர்புடைய 23 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபட ஐந்தாண்டுகள் தடைவிதித்து, இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனில் அம்பானி -கோப்புப்படம்
அனில் அம்பானி -கோப்புப்படம் (Image Credit - ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2024, 4:15 PM IST

மும்பை: பிரபல தொழிலதிபரான அனில் அம்பானி மற்றும் அவருடன் தொடர்புடைய 23 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபட ஐந்தாண்டுகள் தடைவிதித்து, இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட குற்றத்துக்காக அனில் அம்பானிக்கு 25 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான அனில் அம்பானி மற்றும் அவருடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீது கடன்கள் ஒப்புதல் வழங்குவதில் விதிமீறல்கள், நிதி முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் குறித்து செபி தீவிர விசாரணை மேற்கொண்டது.

இதில், அனில் அம்பானி மற்றும் அவரது முக்கிய சகாக்கள் பல்வேறு நிதி முறைகேட்டில் ஈடுப்பட்டிருந்தது தெரியவந்தது என்று செபி கூறியுள்ளது. குறிப்பாக, கடன் என்ற பெயரில் அனில் அம்பானியுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு முறைகேடாக நிதி வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள செபி, இது தீவிரமான விதிமீறல் என்றும் தெரிவித்துள்ளது.

எனவே இதற்கு தண்டனையாக அனில் அம்பானி, அவரது நிறுவனத்தின் மூன்று முக்கிய உயரதிகாரிகள் மற்றும் அவருடன் தொடர்புடைய 23 நிறுவனங்கள், ஐந்தாண்டுகளுக்கு பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட தடைவிதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் தேதியிலிருந்து இத்தடை அமலுக்கு வருகிறது. இந்த காலக்கட்டத்தில் அம்பானி உள்ளிட்ட நபர்களும், குறிப்பிட்ட நிறுவனங்களும் பங்குகளை வாங்கவோ, விற்கவோ கூடாது. மேலும் பங்குச் சந்தை வர்த்தகத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இவர்கள் ஈடுபடக்கூடாது என்றும் தனது 222 பக்க இறுதி உத்தரவில் செபி தெரிவித்துள்ளது.

மேலும், ரிலையன்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (RHFL) நிறுவனம் மூலம், மோசடி திட்டத்தை அனில் அம்பானி செயல்படுத்தியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்காக, அனில் அம்பானிக்கு 25 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் செபி தனது உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அதானியுடன் செபி தலைவருக்கு தொடர்பா? ஹிண்டன்பெர்க் அறிக்கையால் புது சர்ச்சை! என்ன நடந்தது?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.