ETV Bharat / bharat

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை: பஞ்சாப் தேர்தலில் களமிறங்கும் சரப்ஜீத் சிங்! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

Sarabjit Singh: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை படுகொலை செய்த பியாந்த் சிங்கின் மகன் சரப்ஜீத் சிங்(வயது 45) பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாகக் களமிறங்கியுள்ளார்.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி
author img

By PTI

Published : Apr 12, 2024, 10:04 AM IST

சண்டிகர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்.19 ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளில் ஒரே கட்டமாக ஜூன் 1-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில், ஃபரித்கோட் மக்களவைத் தொகுதியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக்கொலை செய்த மெய்க்காவல்களில் ஒருவரான பியாந்த் சிங்கின் மகன் போட்டியிடுகிறார்.

இதுகுறித்து அவர், சரப்ஜீத் சிங் கூறுகையில், "ஃபரித்கோட் மக்கள் விரும்பியதன் பேரில் நான் இந்த தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறேன். இப்பகுதி மக்கள் என் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டுள்ளனர்" என்றார்.

இதற்கு முன்பு 2004 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பதிண்டா தொகுதியில் போட்டியிட்ட சரப்ஜீத் சிங் தோல்வியடைந்தாலும் சுமார் 1.13 லட்சம் வாக்குகள் வாங்கியிருந்தார். பின்னர் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஃபதேகர் சாஹிப் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். 2007-ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பர்னாலா மாவட்டத்தில் உள்ள பதெளர் தொகுதியிலும் அவர் களம் கண்டுள்ளார்.

சரப்ஜீத் சிங்கின் தாயார் பிமல் கவுர், பஞ்சாப் மாநிலம் நோபார் தொகுதியில் 1989-ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் ராஜினாமா? என்ன காரணம்? பாஜகவில் இணைய திட்டமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.