ETV Bharat / bharat

ஜம்மு -காஷ்மீர், ஹரியானா தேர்தல் முடிவுகள்: நட்சத்திர வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி நிலவரம்!

தலா 90 பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள ஹரியானா மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன.

பாஜக, காங்கிரஸ், நயாப் சிங் சைனி, ஒமர் அப்துல்லா, இல்திஜா முஃப்தி
பாஜக, காங்கிரஸ், நயாப் சிங் சைனி, ஒமர் அப்துல்லா, இல்திஜா முஃப்தி (Credits - Getty Images and X Page@BJP4Haryana)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2024, 8:01 PM IST

ஹைதராபாத்: ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் - என்சி கூட்டணி 48 இடங்களை கைப்பற்றியுள்ளது. பாஜக 29 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதேபோல், ஹரியானாவில் மாலை 6.30 மணி நிலவரப்படி பாஜக 45 இடங்களிலும், காங்கிரஸ் 35 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இருகட்சிகளிடையே 5 தொகுதிகளில் இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில், இரு மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி, தோல்வியை சந்தித்த நட்சத்திர வேட்பாளர்கள் குறித்த தகவலை இங்கு காண்போம்:

ஹரியாணாவில் பாஜக முதல்வர் வேட்பாளர் நயாப் சிங் சைனி, காங்கிரஸ் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பாஜகவிலிருந்து விலகி, சுயேட்சையாக போட்டியிட்ட சாவித்ரி ஜிண்டால் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

அதே நேரத்தில் முன்னாள் துணை பிரதமர் சவுத்ரி லால் குடும்பத்தைச் சேர்ந்தவரும், ஜனநாயக் ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா, உச்சன காலன் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அவர் 7950 வாக்குகள் மட்டுமே பெற்று 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அத்தொகுதியில் பாஜகவின் தேவேந்திர சதர் புஜ் அத்திரி 48968 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதையும் படிங்க: ஹரியானாவில் 3வது முறையாக பாஜக ஆட்சி.. அதீத நம்பிக்கையால் வாய்ப்பை இழந்ததா காங்கிரஸ்?

இதேபோல் ஜம்மு - காஷ்மீரில் நட்சத்திர வேட்பாளர்களான தேசிய மாநாட்டுக் கட்சியின் (என்சி) தலைவர் ஒமர் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.ஒய்.தாரிகாமி, ஆம் ஆத்மி கட்சியின் மெஹ்ராஜ் மாலிக் ஆகியோர் வெற்றிக்கனியை சுவைத்துள்ளனர். அதேநேரத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர் மெஹபூபா முஃப்தியின் மகள் இல்திஜா முஃப்தி, அம்மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.

2001 நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளியான அப்சல் குருவின் சகோதரர் ஐஜாஸ் அகமது குரு, வடக்கு காஷ்மீரில் உள்ள சோபோர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெறும் 129 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தார்.

இரு மாநிலங்களிலும் வெற்றி, தோல்வியை கண்ட நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியல் வருமாறு:

1) ஹரியானா:

வேட்பாளர் கட்சிதொகுதிவாக்குகள்முடிவுஎதிர் வேட்பாளர் கட்சிவாக்குகள்
நயாப் சிங் சைனிபாஜகலட்வா70177வெற்றிமேவா சிங்காங்கிரஸ்54123
பூபிந்தர் சிங் ஹூடாகாங்கிரஸ்கர்ஹி சாம்ப்லா-கிலோய்108539வெற்றிமஞ்சுபாஜக37074
வினேஷ் போகத்காங்கிரஸ்ஜூலானா65080வெற்றியோகேஷ்குமார்பாஜக59065
சாவித்ரி ஜிண்டால்சுயேட்சைஹிசார்49231வெற்றிராம் நிவாஸ் ராராகாங்கிரஸ்30290

2) ஜம்மு - காஷ்மீர்:

வேட்பாளர்கட்சிதொகுதிவாக்குகள்முடிவுஎதிர் வேட்பாளர்கட்சிவாக்குகள்
ஒமர் அப்துல்லாஎன்சிகாந்தெப்ரல்32727வெற்றிபஷீர் அகமது மிர்பிடிபி22153
பஷீர் அஹ்மத் ஷா வீரிஎன்சிஸ்ரீ குஃப்வாரா-பிஜ்பெஹாரா33299வெற்றிஇல்திஜா முஃப்திபிடிபி23529
சுரிந்தர் குமார் சவுத்ரிஎன்சிநவ்ஷேரா35069வெற்றிரவீந்தர் ரெய்னாபாஜக27250
எம்.ஒய்.தாரிகாமிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்குல்காம்33634வெற்றிசாயர் அகமது ரெஷிசுயேட்சை25796
முஷ்தாக் குருஎன்சிசன்னபோரா13717வெற்றிசையத் முகமது அல்தாப் புகாரிஜேகேஏபி8029
மெஹ்ராஜ் மாலிக்ஆம் ஆத்மிதோடா23228வெற்றிகஜய் சிங் ராணாபாஜக18690

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.