ETV Bharat / bharat

பிரதமரின் முதல் கையெழுத்து.. 'பிரதமர் கிசான்' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 20,000 கோடி விடுவிப்பு! - pm modi first sign

author img

By ANI

Published : Jun 10, 2024, 5:59 PM IST

Updated : Jun 10, 2024, 6:12 PM IST

PM first signed at Kisan Nidhi Fund: இந்தியாவில் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி விவசாயிகளுக்கான நிதி வழங்கும், பிரதமர் கிசான் நிதி திட்டத்தின் கீழ், 9.3 கோடி விவசாயிகளுக்கு 20,000 கோடி நிதியை விடுவிக்க முதல் கையெழுத்திட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி (Credits - PM MODI X PAGE)

டெல்லி: 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுள்ளார். நேற்று (ஜூன் 9) அமைச்சரவை பதவியேறுப்புக்கு டெல்லி ராஷ்டிரபதி பவனில் அதற்காகப் பிரமாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது, பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 30 மத்திய அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள், மற்றும் 5 மாநில அமைச்சர்கள் (சுயேச்சை) பதவியேற்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று டெல்லியில் உள்ள தனது அலுவலகத்தில் முறைப்படி பிரதமராகப் பொறுப்பேற்றார். அப்போது அவர் 'பிரதமர் கிசான் திட்டத்தின்' 17வது நிதி தொகையை விடுவித்து முதல் கையெழுத்திட்டார்.

இத்திட்டத்தின் மூலம் சுமார் 20,000 கோடி ரூபாய் அளவில் 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கோப்பில் கையெழுத்திட்ட பிரதமர் மோடி கூறுகையில், ''வரும் காலங்களில் விவசாயிகள் மற்றும் விவசாயத் துறைக்காக இன்னும் அதிகமாகப் பணியாற்ற விரும்புகிறோம்'' என்றார்.

பிரதமர் மோடியின் கடந்த இரண்டு முறை ஆட்சியில் முக்கிய திட்டங்களாக ஆயுஷ்மான் பாரத், பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா, அனைவருக்கும் வீடு திட்டம், பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மன் தன் யோஜனா, உஜ்வாலா யோஜனா, பிரதமர் கிசான் சம்மன் நிதி, உடான் மற்றும் மேக் இன் இந்தியா உள்ளிட்ட திட்டங்கள் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மூன்றாவது முறையாகப் பிரதமராகியிருக்கும் மோடி தனது முதல் கையெழுத்தை விவசாயிகளுக்கான நிதி வழங்கும் பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 9.3 கோடி விவசாயிகளுக்கு 20,000 கோடி நிதியை விடுவிக்க முதல் கையெழுத்திட்டுள்ளார்.

நரேந்திர மோடி கடந்த 2014 இல் தொடங்கி இரண்டு முறை பிரதமராக இருந்ததோடு 2001 முதல் மே 2014 வரை குஜராத்தின் மிக நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமைச்சர் பதவியை மறுத்தேனா? பாஜக எம்பி சுரேஷ் கோபி டுவிஸ்ட்!

Last Updated : Jun 10, 2024, 6:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.