அனகபள்ளி: ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள அச்சுதாபுரத்தில் எஸ்சென்ஷியா என்ற பெயரில் பார்மா கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் பார்மா கம்பெனியில் உள்ள ரியாக்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இந்த பயங்கர வெடி விபத்தில் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடி விபத்தின் போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் இருந்ததாகவும் தொடர் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது. தொடர்ந்து படுகாயங்களுடன் மீடகப்பட்ட ஐந்து பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தொழிற்சாலையில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எப்படி ரியாக்டர் வெடித்தது என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படாத நிலையில் அது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பாஜகவில் இணைய மறுப்பு புதிதாக கட்சி தொடங்கும் சம்பாய் சோரன்.. ஜார்கண்ட் அரசியலில் புதிய திருப்பம்! - Champai Soren