உத்திரபிரதேசம்: உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு உள்ள ராமர் கோயிலில், குழந்தை வடிவிலான ராமன் சிலை பிரான் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு கோலாகலமாக இன்று (ஜன.22) நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.
பகல் 12.20 மணிக்குத் தொடங்கியுள்ள பிரான் பிரதிஷ்டை நிகழ்வு 1 மணியளவில் முடிவடைந்தது. இதற்காக, இந்தியா மட்டுமின்றி, பல நாடுகளிலிருந்தும் முக்கிய பிரதிநிதிகள், திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் வருகை புரிந்துள்ளனர்.
குறிப்பாக கிரிக்கெட் ஜம்பவான் சச்சின் டெண்டுல்கர், முன்னாள் இந்திய வீரரான அனில் கும்ப்ளே, வெங்கடேஷ் பிரசாத் மற்றும் இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், சாய்னா நேவால், பி.டி.உஷா உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்கள் அயோத்தி வருகை புரிந்துள்ளனர்.
மேலும் அயோத்தியில் ராமர் கோயில் முன்பு தங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இது குறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ”ராமர் கோயில் விழாவில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது எனது முதல் அயோத்தி வருகை, வரும் காலங்களில் நான் மீண்டும் வருவேன் என நம்புகிறேன். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் ராம் லல்லாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றது பெரு மகிழ்ச்சி என்றார்.
-
Pure Bliss and Blessed to be part of this divine occasion 🙏🏽 #RamMandirAyodhya #JaiShriRamJi pic.twitter.com/sbJ8gyjzYk
— Anil Kumble (@anilkumble1074) January 22, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Pure Bliss and Blessed to be part of this divine occasion 🙏🏽 #RamMandirAyodhya #JaiShriRamJi pic.twitter.com/sbJ8gyjzYk
— Anil Kumble (@anilkumble1074) January 22, 2024Pure Bliss and Blessed to be part of this divine occasion 🙏🏽 #RamMandirAyodhya #JaiShriRamJi pic.twitter.com/sbJ8gyjzYk
— Anil Kumble (@anilkumble1074) January 22, 2024
சாய்னா நேவால்: கும்பாபிஷேகத்தில் பங்கேற்றது குறித்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை சாய்னா நேவால் கூறுகையில் ”உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற்ற ராம் லல்லாவின் ‘பிரான் பிரதிஷ்டை’ விழாவில் கலந்துகொள்வது எங்களுக்கு அதிர்ஷ்டமான ஒன்று. அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.எதிர்காலத்தில் இந்தியர்கள் அனைவரும் ராமர் கோயிலுக்குச் செல்ல வேண்டும்” என்றார்.
-
Ram Mandir 🛕… #AyodhaRamMandir pic.twitter.com/55oaPlUGnw
— Saina Nehwal (@NSaina) January 22, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Ram Mandir 🛕… #AyodhaRamMandir pic.twitter.com/55oaPlUGnw
— Saina Nehwal (@NSaina) January 22, 2024Ram Mandir 🛕… #AyodhaRamMandir pic.twitter.com/55oaPlUGnw
— Saina Nehwal (@NSaina) January 22, 2024
மிதாலி ராஜ்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தனது x பக்கத்தில் “அயோத்தி முழுவதும் தெய்வீக சூழலில் மூழ்கியுள்ளது. இந்த மகிழ்வான நாளில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நாள காலங்காலமாக நினைவில் நிற்கும் நாள்” எனப் பதிவிட்டுள்ளார்.
-
Immersed in the divine ambiance of Ayodhya. Being a part of this glorious ceremony is joy to behold. A day to remember for the ages! #RamMandirPranPrathistha pic.twitter.com/9BYw2UzRUp
— Mithali Raj (@M_Raj03) January 22, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Immersed in the divine ambiance of Ayodhya. Being a part of this glorious ceremony is joy to behold. A day to remember for the ages! #RamMandirPranPrathistha pic.twitter.com/9BYw2UzRUp
— Mithali Raj (@M_Raj03) January 22, 2024Immersed in the divine ambiance of Ayodhya. Being a part of this glorious ceremony is joy to behold. A day to remember for the ages! #RamMandirPranPrathistha pic.twitter.com/9BYw2UzRUp
— Mithali Raj (@M_Raj03) January 22, 2024
இதையும் படிங்க: கோலாகலமாக நடைபெற்ற அயோத்தி ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டா.. பிரதமர் மோடி பங்கேற்பு!