ETV Bharat / bharat

50 ஆண்டுகள் கழித்து அடித்த லாட்டரி.. 67 வயதில் கோடீஸ்வரரான பஞ்சாப் உழைப்பாளி.. சுவாரஸ்ய பின்னணி - Punjab Scrap Dealer Wins lottery - PUNJAB SCRAP DEALER WINS LOTTERY

Punjab Scrap Dealer Wins lottery after 50 years: பஞ்சாப் மாநிலத்தில் 67 வயதான ஸ்கிராப் டீலருக்கு, லாட்டரியில் 2.5 கோடி ரூபாய் பரிசு அடித்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ப்ரீதம் லால் ஜக்கி
ப்ரீதம் லால் ஜக்கி (Credit - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2024, 12:20 PM IST

ஜலந்தர்: என்றாவது ஒருநாள் அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த 50 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட்டை வாங்கி வந்த ஸ்கிராப் டீலருக்கு கடந்த ஞாயிற்றுகிழமை அன்று செய்தித்தாளை எடுத்து பார்த்தபோது இன்ப அதிர்ச்சி. தான் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 2.5 கோடி ரூபாய் பரிசு அடித்திருப்பதை கண்டு வியப்பின் உச்சிக்கே போனார் 67 வயதான ஸ்கிராப் டீலர்.. தேசிய அளவில் பரபரப்பாக பேசப்படும் அந்த சம்பவத்தின் பின்னணியை பார்க்கலாம்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ப்ரீதம் லால் ஜக்கி (67). இவருக்கு அனிதா ஜக்கி என்ற மனைவி உள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக ஜலந்தரில் ஸ்கிராப் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். ஆனால், அதன் மூலம் வரும் வருமானம் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே சரியாக இருந்தது. இதனால், கடந்த 50 ஆண்டுகளாக லாட்டரி வாங்கும் பழக்கம் இவருக்கு இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த ரக்‌ஷா பந்தன் பண்டிகை அன்று லால் ஜக்கியை காண அவரது நண்பர் சேவக் என்பவர் வந்துள்ளார். அப்போது லால் ஜக்கி நண்பனிடம் 500 கொடுத்து, தனது மனைவி பெயரில் ஒரு லாட்டரி சீட்டை வாங்கினார். வழக்கம்போல லாட்டரி சீட்டை வாங்கிவிட்டு தனது அன்றாட வேலைகளை கவனித்து வந்தார் லால் ஜக்கி.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று லாட்டரி பரிசு தொடர்பான செய்தியை தெரிந்துகொள்ள செய்தித்தாளை பார்த்த லால் ஜக்கி, தனது மனைவி பெயரில் வாங்கிய அந்த லாட்டரி சீட்டுக்கு 2.5 கோடி ரூபாய் பரிசு விழுந்திருப்பதை கண்டு அதிர்ந்து போனார். இருப்பினும், அந்த செய்தி உண்மைதானா? தான் வைத்திருந்த லாட்டரி சீட்டு எண்ணிற்குத்தான் பரிசு விழுந்துருக்கா என்று குழப்பமும் லால் ஜாக்கிக்கு எழுந்தது.

இந்த சூழலில், சிறிது நேரம் கழித்து, அவருக்கு லாட்டரி விற்பனை முகவரிடமிருந்து அழைப்பு வந்தது. அவர்கள் அந்த செய்தியை உறுதிப்படுத்தினர். இந்த தகவல் அங்குள்ள மீடியாக்களுக்கு செல்லவே, லால் ஜாக்கியை பேட்டி எடுக்க சென்ற செய்தியாளர்களிடம் பேசிய லால் ஜாக்கி, "என்றாவது ஒருநாள் எனக்கு அதிர்ஷ்டம் கிட்டும் என நம்பிக்கையாக இருந்தேன். 50 ஆண்டுகளாக லாட்டரி வாங்கி வந்த நான் முதன் முதலில் லாட்டரி வாங்கும்போது அப்போதைய விலை 1 ரூபாய் தான். இப்போது ஒரு லாட்டரி 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எந்த அளவுக்கு லாட்டரி விற்பனை முன்னேறியுள்ளது என்று எண்ணி பாருங்கள்.

கடந்த 30 ஆண்டுகளாக நான் ஸ்கிராப் விற்பனை செய்து வருகிறேன். ஆனால், எதையுமே என்னால் சொந்தமாக்கிக்கொள்ள முடியவில்லை. இப்போது இந்த பணத்தை வைத்து சொந்தமாக ஒரு கடையும், வீட்டையும் கட்டவுள்ளேன் என்றும் அதில், 25 சதவீதத்தை சமூகப் பணிகளுக்குச் செலவிடுவேன்" எனவும் லால் ஜாக்கி கூறியுள்ளார்.

67 வயதான லால் ஜக்கியின் வாழ்வில் நடந்துள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆரோவில் கடலில் மூழ்கி உ.பி., இளம்பெண் பலி.. நண்பனின் தாய், கெஸ்ட் அவுஸ் ஊழியர் மீது சந்தேகம்.. புதுச்சேரியில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.