ETV Bharat / bharat

பஞ்சு மிட்டாயில் கேன்சரை உருவாக்கும் ரசாயனம்.. புதுச்சேரியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி!

Chemicals in Panju Mittai: பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய ரசாயனம் கலக்கப்படுவதை உணவு பாதுகாப்புத்துறை கண்டுடித்துள்ளதைத் தொடர்ந்து, பஞ்சு மிட்டாய் விற்பனையில் ஈடுபட்டிருந்த வட மாநில இளைஞர்களிடம் இருந்து பஞ்சு மிட்டாய்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வட மாநில இளைஞர்களிடம் இருந்து பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 1:42 PM IST

புதுச்சேரி: கடற்கரை சாலை மற்றும் சுற்றுலாத் தலங்களில் பிங்க் நிறத்தில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கக்கூடிய ரசாயனம் கலக்கப்படுவதை உணவு பாதுகாப்புத் துறை கண்டுபிடித்துள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் வாயில் போட்ட உடனேயே கரைந்து விடும் மெல்லிய இழையிலான பஞ்சு மிட்டாயை விரும்புவர்.

சர்க்கரையும், நிறமியும் மட்டுமே உள்ள பஞ்சு மிட்டாயில், விஷத்தன்மை கொண்ட ரசாயனம் கலப்பு இருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகம் கொண்ட நிலையில், புதுச்சேரி கடற்கரை சாலையில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து கொண்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம் இருந்த பஞ்சு மிட்டாய்களை வாங்கி சோதனை செய்துள்ளனர். அதில் ரோடமின் பி (RHODAMINE - B) என்ற விஷ நிறமி இருப்பது தெரிய வந்துள்ளது.

இது ஊதுவத்தி மற்றும் தீப்பெட்டியில் வண்ணத்திற்காக பூசப்படும் தொழிற்சாலை விஷ நிறமி ஆகும். இதை சாப்பிடுவதால் கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறினர். குறைந்த விலைக்கு கிடைப்பதினால் இதனை வடமாநில இளைஞர்கள் தெரியாமல் வாங்கி, பஞ்சு மிட்டாய் தயாரித்து விற்பனை செய்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று (பிப்7) பஞ்சு மிட்டாய் விற்பனையில் ஈடுபட்டிருந்த வட மாநில இளைஞர்களிடம் இருந்து பஞ்சு மிட்டாய்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். புதுச்சேரியில் கடற்கரை சாலை, தாவரவியல் பூங்கா மற்றும் பிற சுற்றுலாத் தலங்களில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வரும் வட மாநில இளைஞர்களைப் பிடித்து வந்து விசாரணை நடத்தியதுடன், அவர்களில் சிலர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

புதுச்சேரியில் 30 வட மாநில இளைஞர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருவது தெரிந்ததைத் தொடர்ந்து, அவர்களுடைய விவரங்களை சேகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயக் கழகம் (FSSAI) அனுமதி அளித்துள்ள அங்கீகரிக்கப்பட்ட செயற்கை நிர்ணயைப் பயன்படுத்த உணவு பாதுகாப்த்பு துறையினர் பஞ்சு மிட்டாய் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர். இது குறித்து தன்வந்தி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பஞ்சு மிட்டாய் விற்கும் வட மாநில இளைஞர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சுற்றுலாப் படகுகளை இயக்க எதிர்ப்பு.. ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய புதுச்சேரி மீனவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.