ETV Bharat / bharat

பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் புதுச்சேரி ஆளுநராக நியமனம்! 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்! - New Governors List - NEW GOVERNORS LIST

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

Etv Bharat
President Droupadi Murmu (PTI Photo)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 28, 2024, 6:51 AM IST

டெல்லி: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஆறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்தும், மூன்று மாநில ஆளுநர்களை மாற்றியும் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கேரளாவை சேர்ந்த கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். 1979 பிரிவை சேர்ந்த குனியில் கைலாசநாதன், பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது. குஜராத் முதலமைச்சராக மோடி இருந்த போது கடந்த 2013-14 ஆம் ஆண்டில் மோடியின் தலைமை முதன்மைச் செயலாளராக குனியில் கைலாசநாதன் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், பஞ்சாப் ஆளுநராக செயல்பட்டு வந்த பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்து கடந்த பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில் அந்த ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். தனிப்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் பதவியை பன்வாரிலால் புரோகித் ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பஞ்சாப் புதிய ஆளுநராக குலாம் சந்த் கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் யூனியன் பிரதேசமான சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பாளராகவும் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டே ராஜஸ்தானின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தெலங்கானா மாநில ஆளுநராக ஜிஷ்ணு தேவ் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். சிக்கிம் ஆளுநராக ஓம் பிரகாஷ், ஜார்கண்ட் ஆளுநராக சந்தோஷ் குமார் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரின் ஆளுநராக ராமன் தேகா, மேகாலயா ஆளுநராக சி.எச் விஜயசங்கர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தெலங்கானா மாநில ஆளுநராகவும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

லஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, அசாம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மணிப்பூர் ஆளுநராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஆளுநர்களின் நியமனம், அவர்கள் பதவி ஏற்கும் நாளில் இருந்து அமலுக்கு வரும் என குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "நிதி கேட்டால் மைக் ஆப்.. 5 நிமிடத்திற்கு மேல் பேச அனுமதிக்கவில்லை.." நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா வெளிநடப்பு! - Mamta Banerjee walks out niti aayog

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.