புதுடெல்லி: முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி பிறந்த அப்துல்கலாம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் நாற்பது ஆண்டுகள் விண்வெளி பொறியாளராக பணியாற்றினார்.
இதன் பின்னர் இந்தியாவின் 11ஆவது குடியரசு தலைவராக 2002ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி வரை குடியரசு தலைவராகப் பதவி வகித்தார். 2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி மரணம் அடைந்தார்.
இந்த நிலையில் அல்ஜீரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, அல்ஜியர்ஸ் நகரில் ஏபிஜெ அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
सुप्रसिद्ध वैज्ञानिक और पूर्व राष्ट्रपति डॉ. एपीजे अब्दुल कलाम जी को उनकी जयंती पर आदरपूर्ण श्रद्धांजलि। उनका विजन और चिंतन विकसित भारत के संकल्प की सिद्धि में देश के बहुत काम आने वाला है। pic.twitter.com/g36gwh94Y9
— Narendra Modi (@narendramodi) October 15, 2024
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"புகழ்பெற்ற விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத்தலைவருமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது தொலைநோக்குப் பார்வையும், சிந்தனையும், வளர்ந்த இந்தியா என்ற உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதில் நாட்டுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,” என்று கூறியுள்ளார். மேலும், ஏபிஜே அப்துல்கலாம் உடன் பல்வேறு தருணங்களில் இணைந்து பணியாற்றியதை நினைவு கூறும் வகையில் வீடியோ ஒன்றையும் எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்