ETV Bharat / bharat

பீகாரில் புதிய அரசியல் கட்சியை இன்று அறிவிக்கிறார் பிரசாந்த் கிஷோர் - Prashant Kishor Political Party - PRASHANT KISHOR POLITICAL PARTY

"பீகாரில் கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாக மக்கள் ஆர்ஜேடி அல்லது பாஜகவுக்கு வாக்களித்து வருகின்றனர். இந்த நிர்பந்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். மாற்றுக் கட்சியானது வம்சாவளி சேர்ந்த கட்சியாக இருக்கக் கூடாது" என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோர் (கோப்புப் படம்)
பிரசாந்த் கிஷோர் (கோப்புப் படம்) (Credits - PTI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2024, 12:54 PM IST

பாட்னா: பீகார் மக்களுக்கு ஒரு புதிய அரசியல் தேர்வாக, தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், இன்று தனது புதிய அரசியல் கட்சியை அறிவிக்க உள்ளார்.

பாட்னாவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெறும் மெகா நிகழ்வில் பிரசாந்த் கிஷோர் தனது கட்சியின் பெயர், கொள்கை மற்றும் கட்சியின் தலைவர், 25 பேர் கொண்ட தலைமைக் குழு ஆகியவற்றை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். புதிதாக அறிவிக்கப்பட உள்ள கட்சியில் தான் எந்த பதவியையும் வகிக்கப் போவதில்லை என்றும், தனது தற்போதைய பாதயாத்திரையில் தொடர்ந்து கவனம் செலுத்தப் போவதாகவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

'ஜன் சுராஜ்' என்ற பெயரில் இவர் மேற்கொண்டு வரும் பிரசார பாதயாத்திரை சுபாலில் நிறைவடைய உள்ளது. கட்சி அறிவிப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் அராரியா நோக்கி பிரசாந்த் கிஷோர் செல்ல உள்ளார். இன்றைய கட்சி அறிவிப்பு நிகழ்ச்சிக்கு 50 லட்சம் ஆதரவாளர்கள் வரை வருவார்கள் என ஜான் சுராஜ் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர். லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் மற்றும் பாஜக போன்ற முக்கிய அரசியல் தலைவர்கள், கட்சிகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் பீகாரில் நீண்டகாலமாக உள்ள சாதி, மத அரசியலில் பிரசாந்த் கிஷோரின் குரலும் எதிரொலித்து வருகிறது.

இந்நிலையில் புதிய கட்சி துவங்குவது குறித்து பிரசாந்த் கிஷோர் நேற்று கூறுகையில், "ஜான் சுராஜ் மாற்றுக் கட்சியாக உருவெடுக்கும். பீகாரில் கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாக மக்கள் ஆர்ஜேடி அல்லது பாஜகவுக்கு வாக்களித்து வருகின்றனர். இந்த நிர்பந்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். மாற்று கட்சியானது வம்சாவளி சேர்ந்த கட்சியாக இருக்கக் கூடாது. ஆனால் அதை உருவாக்க விரும்பும் அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து; 3 பேர் உயிரிழப்பு!

கடந்த 2 முதல் 2.5 ஆண்டுகள் பிரச்சாரத்துக்குப் பின்னர், அக்டோபர் 2ஆம் தேதி ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த கட்சிக்கு அடித்தளமிடுகின்றனர். அக்டோபர் 2ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். கட்சி பெயர், கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் அறிவிக்கப்படும்" என்றார்.

ரோஹ்தாஸ் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட பிரசாந்த் கிஷோர், கடந்த 2 ஆண்டுகளாக பீகாரில் லாலு பிரசாத் யாதவ், நிதீஷ் குமார் போன்ற அரசியல் பிரமுகர்கள் மற்றும் பீகார் பாஜக தலைவர்களுக்கு சவால் விடும் வகையில் ஓர் அரசியல் கட்சியை உருவாக்கி வருகிறார்.

இப்பணியை, அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு சம்பாரனில் உள்ள பிதிரஹ்வா காந்தி ஆசிரமத்தில் இருந்து பாதயாத்திரையாக தொடங்கினார். முதலில் 35 ஆயிரம் கி.மீ. தூரத்தைக் கடக்க திட்டமிட்ட அவர், பின்னர் தனது இலக்கை 45 ஆயிரம் கி.மீட்டராக நீட்டித்தார். ஆனால், தற்போது அவர் 55 ஆயிரம் கி.மீ-க்கு மேல் நடந்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.