ETV Bharat / bharat

மதரஸா கட்டடம் இடிப்பு; போலீசார் துப்பாக்கிச் சூட்டில் 1 பலி.. 3 பேர் கவலைக்கிடம்! - ஹல்த்வானி

Uttarakhand On Boil: உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானி பகுதியில் உள்ள பன்புல்புரா காவல் நிலையம் அருகே சட்ட விரோதாமாக கட்டப்பட்ட மதரஸா கட்டடத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Uttarakhand On Boil
மதராஸா கட்டடம் இடிப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 9:43 AM IST

ஹல்த்வானி: உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டம், ஹல்த்வானி பகுதியில் உள்ள பன்புல்புரா காவல் நிலையம் அருகே சட்ட விரோதாமாக கட்டப்பட்ட மதரஸா கட்டடம் ஒன்று உள்ளது. இந்த கட்டடத்தை இடிப்பதற்கு எதிராகப் போராடிய மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சட்டவிரோத கட்டடம் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல எதிர்ப்புகள் வெடித்தன. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக, இந்த மதரஸா கட்டடத்தை இடிப்பதற்காக அதிகாரிகள் புல்டோசர்களுடன் சென்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் வாசிகள் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதில், போராட்டகாரர்கள் அதிகாரிகள் மீது கற்கள் வீசியும், சில வாகனங்களுக்கு தீ வைத்தும் போராட்டம் நடத்தினர்.

இதை சமாளிக்க முடியாமல் போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கு தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக, முதலமைச்சர் டேராடூனில் உள்ள தனது இல்லத்தில் அவரச ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், பன்புல்ரா பகுதியில் ஊரடங்கு உத்தரவு மற்றும் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், பன்புல்புரா காவல் நிலையம் அருகே சட்டவிரோதமாக மதரஸா கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியதாகத் தெரிவித்தனர். ஆனால், இந்த கட்டடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டது தொடர்பான எந்த ஆவணத்தையும் மதரஸா நிர்வாகம் மாநகராட்சியிடம் அளிக்கவில்லை என்பதால் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், ஹல்த்வானி மாநகராட்சியுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் கடந்த சில நாட்களாக அரசு நிலத்தில் உள்ள மதக் கட்டமைப்புகள் உள்ளிட்ட சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Parliament Election 2024 Exit Polls: நாடாளுமன்ற தேர்தல் கருத்து கணிப்பு! 2024 யாருக்கு? நிலவரம் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.