டெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜம் எம்பிக்கள், கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.
#WATCH | After NDA Parliamentary party meeting, Parliamentary Affairs Minister Kiren Rijiju says, " ...today, pm gave us a mantra which is very important. he said that every mp has been elected to the house to serve the nation. irrespective of the party they belong to, service to… pic.twitter.com/JQmnRE316j
— ANI (@ANI) July 2, 2024
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் விதிமுறைகளை பின்பற்றி, நாட்டுக்காக பணியாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற விவகாரங்களில் எம்பிக்கள் அனைவரும் முழுமையாக பங்கு பெறவும், வருகை பதிவேட்டை முறையாக பராமரித்தல் மற்றும் அவரவர் தொகுதிகள் தொடர்பான பிரச்சினைகளை குறித்து அவையில் குரல் எழுப்பி அதுகுறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதை கடமையாக கொண்டு இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில், இன்றைய கூட்டத்தில் பிரதமர் மோடி தங்களுக்கு முக்கியமான மந்திரத்தை வழங்கியதாக தெரிவித்தார். நாட்டுக்காக சேவையாற்ற அனைத்து உறுப்பினர்களும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், கட்சி பாகுபாடின்றி அனைத்து எம்பிக்களும் நாட்டுக்காக சேவையாற்றுவதை முன்னுரிமையாக கொண்டு இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியதாக தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் அனைத்து விவகாரங்களிலும் எம்பிக்கள் கலந்து கொண்டு தங்களின் தொகுதிக்கான பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்ப வேண்டும் என்றும் நீர், சுற்றுச்சூழல், சமூக செயல்பாடு குறித்த விவகாரங்களில் தங்களது கருத்துகளை நாடாளுமன்றத்தில் முன் வைக்க வேண்டும் என பிரதமர் கூறியதாக தெரிவித்தார்.
#WATCH | After NDA Parliamentary party meeting, Parliamentary Affairs Minister Kiren Rijiju says, " ...i believe that when the pm of the country speaks, everyone - not just mps - should take it seriously because he is the prime minister of the country. great people of the country… pic.twitter.com/itD9Kx7fHW
— ANI (@ANI) July 2, 2024
தேசிய ஜனநாயக எம்பிக்கள் நாடாளுமன்ற விதிகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என்றும் ஒரு நல்ல எம்பியாக மாறுவதற்கு அவசியமாக நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு மற்றும் நடத்தை பின்பற்றுவதே என்றும் பிரதமர் மோடி கூறியதாக கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். தொடர்ந்து பேசிய கிரண் ரிஜிஜூ, பிரதமர் மோடி பேசிய வார்த்தைகள் அனைத்து எம்பிக்களுக்கு நல்ல மந்திரமாக அமைந்தது.
குறிப்பாக முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்வாகி உள்ள எம்பிக்களுக்கு பிரதமர் மோடியின் கருத்துக்கள் உத்வேகத்தையும், நல்ல பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டிய மாண்பையும் வழங்குவதாக அமைந்தது என்றார். நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவரின் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், அதில் பிரதமர் மோடி இன்று உரையாற்ற உள்ளார்.
நேற்று நடைபெற்ற விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திம், நீட் விவகாரம், இந்துக்கள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார். அதற்கு இன்று பிரதமர் மோடி பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 2000ல் போடப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பு.. சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை- டெல்லி நீதிமன்றம் உத்தரவு! - Medha Patkar