ETV Bharat / bharat

“பாஜகவிற்கு தெற்கில் வாக்கு சதவீதம் அதிகரிக்கிறது” - பிரதமர் மோடி பேச்சு! - Lok Sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 3:04 PM IST

Narendra Modi: பிரதமர் மோடி தெலங்கானாவில் பாஜகவின் வாக்கு சதவீதம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாகவும், கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போதே தென்னிந்தியாவில் தனிப் பெரும்பான்மை மிக்க கட்சியாக உருவெடுத்ததாகவும் கூறியுள்ளார்.

2024 மக்களவை தேர்தலில் பாஜக வாக்கு சதவிதம் குறித்து கணித்து கூறிய பிரதமர் மோடி

டெல்லி: தென் இந்தியாவில் உள்ள அரசுகளை கடுமையாக விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2019 தேர்தலை விட, 2024 மக்களவைத் தேர்தலில் தெற்கில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.

பாஜக உயர் சமூகத்தினருக்கான கட்சி என்ற குற்றச்சாட்டு குறித்து தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறிய பிரதமர் மோடி, “பாஜக உயர் சமூகத்தினருக்கான கட்சி என ஒரு பிம்பம் நீண்ட காலமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் பாஜகவில் உள்ளவர்கள் பெரும்பாலானோர் பட்டியலின சமூகத்தினர், பட்டியலின பழங்குடியினர், மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆவர். இன்றைய நிலையில், எனது கட்சியில் அதிகபட்சமாக கிராமத்தினரே உள்ளனர்.

பாஜக பழைய சிந்தனைகளை பின்பற்றும் கட்சி எனவும், புதிய சிந்தனைகளை உருவாக்குவது இல்லை என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், உலக அளவில் மிகப்பெரிய ஆக்கப்பூர்வமான டிஜிட்டல் இயக்கத்தை பாஜக வழிநடத்தி வருகிறது. எனவே, பாஜகவுக்கு எதிராக பரப்பப்படும் இந்த கருத்து தவறானது.

பாஜகவின் வாக்கு சதவீதம் குறித்து பேசிய பிரதமர் மோடி, “நீங்கள் தெலங்கானாவை எடுத்துக் கொண்டால், பாஜக வாக்கு சதவிதம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. கடந்த 2019இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தெற்கில் பாஜக தனிப் பெரும்பான்மை கொண்ட கட்சியாக உருவெடுத்துள்ளது.

பாஜக அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்த 2024 தேர்தலில் பாஜக வாக்கு சதவீதம் இதுவரை நடந்த தேர்தலை விட அதிகரிக்கும் என நம்புகிறேன்” என்றார். பிரதமர் மோடி கர்நாடகா, கேரளா போன்ற தென் மாநிலங்களில் பாஜக புறக்கணிப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “அது காங்கிரஸாக இருந்தாலும் சரி, இடதுசாரி கட்சியாக இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி, அனைத்து இடங்களிலும் அவர்கள் அடையாளம் என்ன? புதுச்சேரியில் பாஜக ஆட்சியில் உள்ளது.

அதேபோல், தென்னிந்தியர்கள் மற்றும் வங்காளத்தைச் சேர்ந்த சகோதரர்கள் அதிகமாக வசிக்கும் அந்தமான், நிகோபார் தீவுகளில் பாஜக எம்பிக்கள் உள்ளனர். அவர்கள் குடும்ப ஆட்சி செய்கின்றனர். தெற்கில் இந்த நிலைமை தான் உள்ளது” என்றார். கேரளாவில் ஆட்சி குறித்து மோடியிடம் கேட்டதற்கு, “பாஜக மற்றும் ஜனசங்க காலத்திலிருந்தே, நாங்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பணியாற்ற விரும்புகிறோம். அரசியல் ஆதாயம் உள்ள இடத்தில் பணியாற்ற வேண்டும். பணத்திற்காக பணியாற்றக் கூடாது” என கூறினார்.

மேலும், “ஜனசங்கத்தின் மிகப்பெரிய தேசிய மாநாடு கேரளாவில் 1967ஆம் ஆண்டு நடைபெற்றது. மற்ற மாநிலங்களைப் போல் கேரளாவில் நாங்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றினோம். பாஜகவின் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இன்றும் நாங்கள் மா பாரதிக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் பணியாற்ற விரும்புகிறோம்.

எங்கள் தொண்டர்களைக் கொன்றதற்காக இடதுசாரிகள் பலர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ளனர். இந்நிலையிலும் கட்ச், கவுகாத்தி முதல் காஷ்மீர், கன்னியாகுமரி வரை நாட்டின் ஒவ்வொரு மூலையும் எங்களுடையது தான். மேலும் கேரளாவில் அதிக ஊழல் உள்ளது” என கூறினார்.

மேலும் பேசிய மோடி, "நீங்கள் திரிபுரா மாநிலத்தில் இடதுசாரிகள் கடந்த 3 முதல் 4 தசாப்தங்களில் ஆட்சி புரிந்ததை பார்த்திருப்பீர்கள். அதன்பின், அங்கு பாஜக ஆட்சிக்கு வந்த போது, இடதுசாரிகள் அந்த மக்களிடம் கொள்ளை அடித்து ஆட்சி செய்ததை உணர்ந்தனர். பாஜக திரிபுராவில் நன்றாக ஆட்சி செய்கிறது. அடுத்த முறையும் அங்கு பாஜக ஆட்சிக்கு வரும். அதேபோல் தான் வங்காளம் மற்றும் கேரளாவில் உள்ளது. அப்பகுதியில் அதிக ஊழல் உள்ளது" என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கர்நாடகவில் கல்லூரி மாணவரி கொலை வழக்கு! அரசை கண்டித்து ஏபிவிபி அமைப்பினர் தொடர் போராட்டம்! - Karnataka College Girl Murder

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.