சென்னை: சகோதரத்துவத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில், பெண்கள் யாரை தனது சகோதரர்களாக கருதுகிறார்களோ, அவர்களது மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது முக்கிய நிகழ்ச்சியாகும்.இதனை ஏற்றுக்கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்த சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது.
ரக்ஷா பந்தன்: முதலில் வட இந்திய பகுதிகளில்தான் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆனால் தற்போது தென் இந்தியாவிலும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் பௌர்ணமி நாளில் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படும். உடன் பிறந்த மற்றும் உடன் பிறவா சகோதர சகோதரிகளிடையே பாச பிணைப்பை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இன்று கொண்டாடப்பட்டு வரும் ரக்ஷா பந்தனுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
रक्षा बंधन के पावन अवसर पर, मैं सभी देशवासियों को हार्दिक बधाई और शुभकामनाएं देती हूं। भाई-बहन के बीच प्रेम और आपसी विश्वास की भावना पर आधारित यह त्योहार, सभी बहन-बेटियों के प्रति स्नेह और सम्मान की भावना का संचार करता है। मैं चाहूंगी कि इस पर्व के दिन, सभी देशवासी, हमारे समाज…
— President of India (@rashtrapatibhvn) August 19, 2024
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து: ரக்ஷா பந்தனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில், “மங்களகரமான ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விழா, சகோதரன், சகோதரிகளுக்கு இடையிலான அன்பு, நம்பிக்கை அடிப்படையிலான இந்த விழா, அனைத்து சகோதரிகள் மற்றும் மகள்கள் மீது பாசத்தையும் மரியாதையும் ஏற்படுத்துகிறது. இந்த நன்னாளில் நமது சமுதாயத்தில் உள்ள பெண்களின் மரியாதையையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய நாட்டு மக்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
समस्त देशवासियों को भाई-बहन के असीम स्नेह के प्रतीक पर्व रक्षाबंधन की ढेरों शुभकामनाएं। यह पावन पर्व आप सभी के रिश्तों में नई मिठास और जीवन में सुख, समृद्धि एवं सौभाग्य लेकर आए।
— Narendra Modi (@narendramodi) August 19, 2024
பிரதமர் மோடி வாழ்த்து: இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சகோதரன், சகோதரிகளுக்கிடையிலான அன்பின் அடையாளமாக உள்ள ரக்ஷா பந்தன் பண்டிகை தின வாழ்த்துக்கள். இந்த புனித பண்டிகை உங்களது உறவில் இனிமையையும், செழுமையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
भाई-बहन के अटूट प्रेम एवं स्नेह के पर्व, रक्षाबंधन की सभी देशवासियों को बहुत-बहुत बधाई और शुभकामनाएं।
— Rahul Gandhi (@RahulGandhi) August 19, 2024
रक्षा का यह सूत्र आपके इस पावन रिश्ते को सदैव मजबूती के साथ जोड़े रहे। pic.twitter.com/Xvsqj2rt4e
ராகுல் காந்தி வாழ்த்து: காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “சகோதரர், சகோதரிகளுக்கு இடையே உள்ள அழியாத அன்பு மற்றும் பாசத்தின் பண்டிகையான ரக்ஷா பந்தனுக்கு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த பாதுகாப்பு நூல் எப்போதும் உங்களின் புனிதமான உறவை வலுவாக்கும்” என்று குறிப்பிட்டு, அவரும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
समस्त देशवासियों को ‘रक्षाबंधन’ के पावन पर्व की हार्दिक शुभकामनाएँ।
— Amit Shah (@AmitShah) August 19, 2024
भाई-बहन के अटूट प्रेम व स्नेह के इस पर्व पर सभी के सुख व समृद्धि की प्रार्थना करता हूँ। pic.twitter.com/ZCyNEZun28
அமித் ஷா வாழ்த்து: உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நாட்டு மக்கள் அனைவருக்கும் ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள். சகோதர, சகோதரிகளுக்கு இடையிலான உடைக்க முடியாத அன்பு மற்றும் பாசத்தின் வெளிப்பாடான இந்த பண்டிகையில், அனைவரின் மகிழ்ச்சிக்காக பிராத்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
भाई-बहन के अटूट स्नेह व विश्वास के पावन पर्व रक्षाबंधन की समस्त देशवासियों को हार्दिक बधाई व शुभकामनाएं देता हूँ।
— Jagat Prakash Nadda (@JPNadda) August 19, 2024
ईश्वर से प्रार्थना करता हूँ, कि हमारी पावन संस्कृति का यह उत्सव सभी के जीवन को सुख-सौभाग्य व समृद्धि से परिपूर्ण रखे।
ஜே.பி. நட்டா வாழ்த்து: மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜே.பி. நட்டா வெளியிட்டுள்ள பதிவில், “சகோதர, சகோதரிகளுக்கு இடையே உள்ள உடைக்க முடியாத அன்பையும், நம்பிக்கையும் வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் திருநாள் வாழ்த்துக்கள். நமது புனிதமான கலாச்சார பண்டிகையான ரக்ஷா பந்தன், அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியை உண்டாக்க இறைவனை பிராத்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: பாஜகவில் இணைகிறாரா சம்பாய் சோரன்? திடீர் பதிவால் திருப்பம்.. ஜார்கண்ட் அரசியலில் என்ன நடக்கிறது? - FORMER Jharkhand CM