டெல்லி: 18வது மக்களவை கூட்டத் தொடர் நேற்று (ஜூன்.24) கூடியது. இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள், தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து இன்று (ஜூன்.25) இரண்டாவது ஏனைய எம்பிக்கள் பதவியேற்கின்றனர்.
நாளை (ஜூன்.26) மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. மக்களவை சபாநாயகரை போட்டியின்றி தேர்வு செய்ய பாஜக விரும்புகிறது. இதன் காரணமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
#WATCH | " we have said to rajnath singh that we will support their speaker (candidate) but the convention is that the post of deputy speaker to be given to opposition...," says congress mp rahul gandhi pic.twitter.com/CaeRn8ztAR
— ANI (@ANI) June 25, 2024
இந்த ஆலோசனையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாகவும் அதேநேரம் துணை சபாநாயகர் பொறுப்பை எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்கக் கோரியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் கோரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, சபாநாயகர் தேர்வு குறித்து எதிர்க்கட்சிகளின் ஆதரவை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கோரியதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணியின் சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு தரும் பட்சத்தில் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இரு தரப்பின் ஒருமித்த கருத்துடன் போட்டியின்றி சபாநாயகரை தேர்வு செய்வது குறித்து காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம், அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தியதாக ராகுல் காந்தி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுவதாகவும், எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதாக இன்று நாளிதழில்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார்.
#WATCH | Delhi: Congress MP Rahul Gandhi says " today it is written in the newspaper that pm modi has said that the opposition should cooperate with the govt constructively. rajnath singh called mallikarjun kharge and he asked him to extend support to the speaker. the entire… pic.twitter.com/yR5CzlagEx
— ANI (@ANI) June 25, 2024
போட்டியின்றி சபாநாயகரை தேர்வு செய்ய விரும்பும் பாஜக மீண்டும் ஒம் பிர்லாவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அதேநேரம் துணை சபாநாயகர் பதவியை பாஜக கூட்டணிக் கட்சிகளான ஆந்திராவின் தெலுங்கு தேசம் மற்றும் பீகாரின் ஐக்கிய ஜனதா தளமும் கோருவதாக தகவல் கூறப்படுகிறது.
ஜூன் 26ஆம் தேதி மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து ஜூன் 27ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றுகிறார். மக்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 எம்பிக்களின் ஆதரவு உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு 234 எம்.பிக்கள் உள்ளனர்.
இதையும் படிங்க: ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி ஐசியுவில் அனுமதி! உண்ணாவிரதத்தால் உடல் நலக்கோளாறு! - Atishi Admitted in hospital