ETV Bharat / bharat

நீட் கருணை மதிப்பெண் ரத்து; 1563 மாணவர்களுக்கு மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு! - NEET Re Exam - NEET RE EXAM

NEET Re Exam: கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கு ஜூன் 23ல் மறுதேர்வு நடத்த முடிவெடுத்துள்ளதாக தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 11:47 AM IST

Updated : Jun 13, 2024, 1:04 PM IST

டெல்லி: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கடந்த மே மாதம் 5ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் தேர்வில் குளறுபடி நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஆள் மாறாட்டம், குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் அதிகம் பேர் நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெற்றது, ஒரே தேர்வு மையத்தில் ஒன்றாக தேர்வெழுதிய மாணவர்கள் முழு மதிப்பெண் எடுத்தது, தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

குறிப்பாக பீகார், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார் சர்ச்சையானது. மேலும் நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததும், அரியானாவில் ஒரே தோ்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 போ் முதலிடம் பிடித்தது உள்ளிட்ட சம்பவங்கள் சர்ச்சையைக் கிளப்பின.

இதனையடுத்து நீட் தோ்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில மையங்களில் வழங்கப்பட்ட வினாத்தாள் முற்றிலும் மாறுபட்டு, மிகவும் கடினமாக இருந்ததாக மாவட்ட ஆட்சியரிடம் தேர்வு எழுதிய மாணவர்கள் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

இவ்வாறாக நீட் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால் மறுதோ்வு நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து நீட் தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைத்து விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை(National Testing Agency) தெரிவித்துள்ளது.

மேலும் அந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பென் ரத்து செய்யப்படுவதாகவும், விருப்பமுள்ள மாணவர்கள் மறு தேர்வு எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விருப்பமுள்ள மாணவர்களுக்கு ஜூன் 23 ஆம் தேதி தேர்வுகள் நடத்தப்பட்டு, ஜூன் 30 ஆம் தேதிக்கு முன் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஜூன் 24-ல் தொடங்குகிறது 18-ஆவது மக்களவை கூட்டத்தொடர்!

Last Updated : Jun 13, 2024, 1:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.