டெல்லி: நீட் தேர்வு முடிவுகள் அந்தெந்த தேர்வு மையங்கள் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. இன்று (ஜூலை.20) நண்பகல் 12 மணி அளவில் தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில், தேர்வு மையங்கள் வாரியாக மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
நீட் முறைகேடு தொடர்பாக அந்த தேர்வை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும், நீட் தேர்வு முடிவுகளை மதிப்பெண் அடிப்படையில் தேர்வு மையங்கள் வாரியாக வெளியிட வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
The National Testing Agency (NTA) has declared the state-wise and centre-wise data of the results of the National Eligibility cum Entrance Test (NEET) 2024.
— ANI (@ANI) July 20, 2024
இதையடுத்து, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்படும் நீட் தேர்வின் மதிப்பெண் வாரியான முடிவுகளை நகரங்கள் மற்றும் மையங்கள் வாரியாக தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்திருக்கிறார்களா என்பதை ஆராயும் வகையில் நகர மற்றும் தேர்வு மையங்கள் வாரியாக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அவ்வாறு, ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் அதிகம் பேர், அதிக மதிப்பெண் எடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அது தொடர்பாக விசாரணையை கொண்டு செல்ல உச்ச நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. இதனிடையே நீட் தேர்வு முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 22ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய அல்லது மறுதேர்வு நடத்துவது தொடர்பாக உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீட் முறைகேடு வழக்கின் தீா்ப்பை லட்சக்கணக்கான மாணவா்கள் எதிா்நோக்கி உள்ளதாகவும், சிபிஐ மேற்கொண்டு வரும் விசாரணை தொடா்பான சில விவரங்கள் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதால் அதை வெளியிட்டால் விசாரணையை பாதிக்கும் என்பதால் வெளியிட முடியாது என்றும் கூறினர்.
முறைகேடுகள் காரணமாக நீட் தோ்வின் புனிதத்தன்மை முழுமையான அளவில் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்படும் போது மறுதோ்வு நடத்துவதற்கான உத்தரவைப் பிறப்பிக்க முடியும் என்றும் நீட் தோ்வை ரத்து செய்யக் கோரும் அல்லது மறு தோ்வு நடத்தக் கோரும் மனுதாரா்கள், வினாத்தாள் கசிவு ஒட்டுமொத்த நீட் தோ்வையும் பாதித்தது என்பதற்கான ஆதாரத்தை சமா்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தோ்வு முறைகேடுகள் பரவலாக நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், நீட் தோ்வு முடிவுகளை தோ்வு மையம் மற்றும் நகர வாரியாக ஜூலை 20 பகல் 12 மணிக்குள் தேசிய தேர்வு முகமை வெளியிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: இயல்பு நிலை திரும்பும் விமான நிலையங்கள்- மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம்! - Airports working normally