பாட்னா: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பீகாரின் முதலமைச்சர் நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெறும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைவரான நிதிஷ் குமார் முதலமைச்சராகவும், நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சராக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வு யாதவ் இருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுடன் நிதிஷ் குமாருக்கு அதிருப்தி ஏற்பட்ட நிலையில் கூட்டணியில் இருந்து விலகுவதாக நிதிஷ் கூறி வந்த நிலையில், இன்று (ஜன. 28) தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்து முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
-
பீகார் முதலமைச்சராக 9வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்பு! #etvbharat #etvbharattamil #nitishkumar #BJP @BJP4India @NitishKumar pic.twitter.com/uA6cHStUjL
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) January 28, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">பீகார் முதலமைச்சராக 9வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்பு! #etvbharat #etvbharattamil #nitishkumar #BJP @BJP4India @NitishKumar pic.twitter.com/uA6cHStUjL
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) January 28, 2024பீகார் முதலமைச்சராக 9வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்பு! #etvbharat #etvbharattamil #nitishkumar #BJP @BJP4India @NitishKumar pic.twitter.com/uA6cHStUjL
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) January 28, 2024
இதனை தொடர்ந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பாஜக ஆதரவு அளித்த நிலையில் இன்று (ஜன. 28) மாலை 5 மணிக்கு மீண்டும் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவி ஏற்றுக் கொண்டார். பாட்னாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லோகர் முன்னிலையில் நிதிஷ் குமார் 9வது முறையாக முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
மேலும், பாஜகவின் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா துணை முதலமைச்சர்களாகவும், 8 பேர் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றுக் கொண்டனர். பீகார் மாநிலத்தில் ஒன்பதாவது முறையாக நிதிஷ் குமார் முதலமைச்சர் ஆகிய நிலையில், அதிக முறை முதலமைச்சராக பதவியேற்றவர் என்ற சிறப்பையும் அவர் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் 7 முறை கூட்டணி தாவல்! இந்த முறை நிதிஷின் யோசனை சாத்தியமாகுமா?