ETV Bharat / bharat

நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி - neet paper leak 2024

NEET UG 2024 Hearing: நாடு முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததா என்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் (கோப்புப் படம்)
உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் (கோப்புப் படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By PTI

Published : Jul 22, 2024, 2:23 PM IST

டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முடிவுகள் குளறுபடி விவகாரம் நாடளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்திலும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் நீட் குளறுபடி குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் நடந்து முடிந்த நீட் UG 2024 தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுக்களை இன்று உச்ச மீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீட் மறுதேர்வு கோரும் மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் நரேந்திர ஹூடா ஆஜராகி, ''தேர்வு முகமை வெளியிட்டிருக்கும் முடிவில் பல முரண்பாடுகள் இருக்கிறது. வினாத்தாள் கசிவு நடந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பீகார் காவல்துறையின் விசாரணையில், மே 4 ஆம் தேதி வினாத்தாள் கசிவு நடந்ததாகவும், அந்தந்த வங்கிகளில் வினாத்தாள்கள் பத்திரப்படுத்தி வைப்பதற்கு முன்பே கசிந்திருப்பது தெரிய வந்துள்ளது என்றார்.

மேலும், தேர்வு மையங்களின் அகில இந்திய தரவரிசைகள் மற்றும் வரிசை எண்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் வினாத்தாள் கசிவு இருப்பதை அரசு ஒப்புக்கொள்கிறது என்றும் வழக்கறிஞர் ஹூடா சுட்டிக்காட்டினார். அதனை, தொடர்ந்து நீட் தேர்வு (2024) ரத்து செய்யப்படுவதற்கு எதிராக ஒன்றிய அரசும், தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை தரப்பும் வாதிட்டன.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட பின்னர் உச்ச மீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ''மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நடப்பதற்கு முந்தைய நாள் (மே 4ம் தேதி) மாலை மாணவர்களுக்கு வினாத்தாள்கள் கசியப்பட்டுள்ளது. இந்த கசிவு நாடு முழுக்க பரவியுள்ளதா? தரவுகள் அடிப்படையில் பார்த்தால் பாட்னா உள்ளிட்ட 2 இடங்களில் வினாத்தாள் கசிந்தது உறுதியாகிறது. நாடு முழுவதும் இதுபோல வினாத்தாள் கசிந்ததா என்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது'' என உச்ச மீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் துணை முதல்வர் விவகாரம்.. ஒரே நேரத்தில் உயர் பதவி வகித்த தந்தை - மகன் யார்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.