ETV Bharat / bharat

நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்வெழுதாத மாணவர்களுக்கு புதிய தரவரிசை பட்டியலில் மதிப்பெண்கள் என்ன? - NEET Re Examination Result

NEET Re-Examination Results 2024: நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்வெழுதாத மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படுவதற்கு முன்பு, நீட் தேர்வில் என்ன மதிப்பெண் பெற்றனரோ அந்த மதிப்பெண்கள் மட்டுமே மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வில் கணக்கில் கொல்லப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு தொடர்பான கோப்புப்படம்
நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 1, 2024, 10:50 AM IST

சென்னை: தேசிய தேர்வு முகமை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வை மே 5ஆம் தேதி 571 நகரங்களில் உள்ள 4,750 மையங்களில் 13 மாநில மொழிகளில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வினை மொத்தமாக 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 மாணவர்கள் எழுதினர். அவர்களில் 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 பேர் தகுதிபெற்றனர்.

நீட் தேர்வினை (NEET Exam) எழுதிய தமிழக மாணவர்கள் 8 பேர் உட்பட 67 பேர் 720-க்கு 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கிடையில், நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் கேள்விக்கான விடைக்குறிப்புகள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் மே 29ஆம் தேதி வெளியிடப்பட்டது.

மேலும், அதன் மீது மாணவர்கள் தங்களின் ஆட்சேபனைகளை ஜூன் 1ஆம் தேதி வரையில் தெரிவிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. விடைக்குறிப்புகளை வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்து அவர்கள் வழங்கும் விடைக்குறிப்பே இறுதியானது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதுமட்டும் அல்லாது, 2024ஆம் ஆண்டு நீட் தேர்வர்கள் பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில், மே 5ஆம் தேதி அன்று நடைபெற்ற நீட் தேர்வின் சில தேர்வு மையங்களில் தேர்வு நடத்தும் போது நேரமிழப்பு ஏற்பட்டதாக மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

மேலும், தேர்வை முடிக்க தங்களுக்கு முழுமையான 3 மணி நேரம் 20 நிமிடங்கள் கிடைக்கவில்லை எனவும் வினாத்தாள்கள் தவறாக விநியோகிக்கப்பட்டது என்றும் சிலரது ஓஎம்ஆர் தாள்கள் கிழிந்தது என்றும் அந்த மனுக்களில் தேர்வர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களில் இருந்து சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் குறைகளை ஜி.ஆர்.சி குழு பரிசீலித்து. தேர்வு நேர இழப்பு கண்டறியப்பட்டு, பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு அவர்களின் பதிலளிக்கும் திறன் மற்றும் இழந்த நேரத்தின் அடிப்படையில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.

அந்த வகையில், 1563 தேர்வர்களுக்கு நேரமிழப்பு காரணமாக கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நீட் தேர்வில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி கருணை மதிப்பெண் பெற்ற 1563 மாணவர்களுக்கும் மறு தேர்வு நடத்தப்பட்டது.

சத்தீஸ்கர், சண்டிகர், குஜராத், ஹரியானா மற்றும் மேகாலயா உள்ளிட்ட தேர்வு மையங்களில் இந்த மறு தேர்வு நடத்தப்பட்டது. 1563 மாணவர்களில் 813 மாணவர்கள் மட்டுமே இந்த மறு தேர்வில் பங்கேற்ற நிலையில், மீதமுள்ள 750 மாணவர்கள் பங்கேற்கவில்லை.

மறு தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படுவதற்கு முன்பு, நீட் தேர்வில் என்ன மதிப்பெண் பெற்றனரோ அந்த மதிப்பெண்கள் மட்டுமே மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வில் கணக்கில் கொல்லப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், மறு தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கான தேர்வு மதிப்பெண் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும், exams.nta.ac.in/NEET எனும் இணையதளத்தின் மூலம் மறு தேர்வுக்கான முடிவுகளை அறியலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு; 3 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கைது..24 பேர் மீது வழக்குப் பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.