ETV Bharat / bharat

ஆம்ஸ்ட்ராங் கொலை: தமிழ்நாடு அரசு பதிலளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ்! - NCSC Notice To TN Govt

NCSC Notice To TN Govt: ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு டிஜிபி ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், ஆம்ஸ்ட்ராங்
தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், ஆம்ஸ்ட்ராங் (Credits - NCSC Website and BSP TN Unit FB Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 9, 2024, 1:48 PM IST

டெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூன் 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பாட்டர். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பெரம்பூர், செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜான் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறியிருந்தார். மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை தமிழ்நாடு அரசு சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ்: பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தேசிய தாழ்த்தபட்டோர் ஆணையம் தாமாக முன்வந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை தேசிய தாழ்த்தபட்டோர் ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது. அதோடு, ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ள தமிழ்நாடு தலைமை செயலாளர் விளக்கம் அளிக்கவும், தமிழ்நாடு டிஜிபி பதில் அளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இது படுகொலை என்பதால் விரைந்து பதிலளிக்கவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, பல சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு திருவள்ளூர் மாவட்டம், பொத்தூர் கிராமத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாகத் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் நேரில் அஞ்சலி: இந்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆம்ஸ்ட்ராங் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்பு, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: போனில் வந்த மிரட்டல்.. 67 லட்சம் உடனே டிரான்ஸ்பர்.. கோவை தொழிலதிபரை நடுங்க வைத்த ம.பி.கும்பல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.