ETV Bharat / bharat

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமீன்.. ஆனாலும் வெளியே வருவதில் சிக்கல்! - JAFFER SADIQ BAIL

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 9:39 AM IST

Jaffer Sadiq Granted bail: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப் படம்
கோப்புப் படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

டெல்லி: சர்வதேச அளவில் வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள்களை கடத்தியதாக பல கோடி மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமிழ் சினிமா தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த மார்ச் 9ஆம் தேதி டெல்லியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அதேபோல, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை என மற்றொரு வழக்கில், அமலாக்கத்துறையால் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமீன் டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாதத்தின் முதல் திங்கட்கிழமைகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தலைமை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், செல்போன் எண்ணை விசாரணை அதிகாரிடம் வழங்குவதோடு எப்போதும் ஆன் செய்து வைத்திருக்க வேண்டும், பாஸ்போர்ட்டை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளுடன் ஜாமீன் டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல கோடி மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமிழ் சினிமா தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கி டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்டது: கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் ஆயிரம் கோடிக்கும் மேல் போதைப்பொருள் பிடிபட்டதாகக் கூறப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் நடத்தப்பட்ட சோதனையில் மெத்தபட்டமைன் மற்றும் சூடோபெட்ரொம் ஆகிய போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இதை அடுத்து அவர் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அவரிடம் தீவிர விசாரணை செய்யப்பட்டது.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்: முன்னதாக ராஜஸ்தானில் பதுங்கி இருந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டதோடு, அவரது கூட்டாளியான சதானந்தமும் சென்னை தேனாம்பேட்டையில் கைது செய்யப்பட்டார். இதை அடுத்து அவர்களிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். இது தொடர்பாக, டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் ஐந்து பேர் மீதும் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. போதைப்பொருள் கடத்தியதை ஜாபர் சாதிக் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.

ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமீன்: போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டு, அவரது குரல் மாதிரி சேகரிக்கப்பட்டு தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இக்கடத்தல் மூலமாக வரும் பணத்தை ஜாபர் சாதிக் சினிமா உள்ளிட்ட தொழில்களில் முதலீடு செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக, பிரபல இயக்குனரான அமீரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய பிணை ஆணை
டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய பிணை ஆணை (Credits - ETV Bharat Tamil Nadu)

முன்னதாக ராஜஸ்தானில் பதுங்கி இருந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டதோடு, அவரது கூட்டாளியான சதானந்தமும் சென்னை தேனாம்பேட்டையில் கைது செய்யப்பட்டார். இதை அடுத்து அவர்களிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். இது தொடர்பாக, டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் ஐந்து பேர் மீதும் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. போதைப்பொருள் கடத்தியதை ஜாபர் சாதிக் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.

ஜாமீனுக்கு என்னென்ன நிபந்தனைகள்: ஏற்கனவே சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ், ஜாபர் சாதிக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் கடத்தல் வழக்கில் மட்டும் தான் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, விசாரணை முடிவடையும் வரை ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஜாபர் சாதிக் கையெழுத்திட வேண்டும், அவரது செல்போன் எண்ணை விசாரணை அதிகாரிக்கு வழங்கி, அது எப்போதும் ஆன் (On) செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், முகவரி மாறினால் அது குறித்த தகவல்களை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

சிறையிலிருந்து வெளியே வருவதில் சிக்கல்: இது மட்டுமல்லாமல், ஜாமீன் தொகையாக ஒரு லட்சத்தை ஜாபர் சாதிக்கும், மேலும் இருவர் தலா ஒரு லட்சத்தை செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஆனாலும், திகார் சிறையில் இருந்து ஜாபர் சாதிக் வெளியே வர முடியாது. காரணம் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதே நேரத்தில், அவர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. அந்த வழக்கிலும் விடுதலை செய்யப்பட்டால் தான் ஜாபர் சாதிக் வெளியே வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜாபர் சாதிக்கின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல.. நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாதம்! - jaffer sadiq drug case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.