ETV Bharat / bharat

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்! - Kallakuruchi NHRC notice to TN Govt

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு வாரத்திற்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 4:07 PM IST

டெல்லி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக, தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஒரு வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைவருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எத்தனை பேர், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை, எவ்வளவு பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர், கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு தரப்பில் வழங்கப்பட்ட நிவாரணம் என்ன, கள்ளச்சாராய விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது எடுக்கபட்ட நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து குறிப்பிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளிதழ்களில் வந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து உள்ள தேசிய மனித உரிமை ஆணையம், மதுபானங்களின் உற்பத்தி, உடைமை, போக்குவரத்து, கொள்முதல் மற்றும் விற்பனை ஆகியவற்றைக் கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு பிரத்யேக அதிகாரம் உள்ள நிலையில், தவறு எங்கு நடந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளது.

ஒரு வாரத்திற்குள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது.

ஏறத்தாழ 156 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 96 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக கூறப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சராய சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக 20க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: "அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மீதான தடை உறுதி"- டெல்லி உயர் நீதிமன்றம்! - Arvind Kejriwal bail

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.