பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை கொட்டி வருகிறது. தொடர் கனமழை காரணமாக ஆங்காங்கே மழை நீர் தேங்கி காணப்படுகிறது. மேலும் தேங்கிய மழை நீரில் உற்பத்தியாகும் கொசுக்களால டெங்கு காய்ச்சல் கர்நடகா மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
இதுவரை டெங்கு காயச்சல் பாதித்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த 11 வயது சிறுவன் வைரல் நோய் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜூலை 5ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அதற்கு முன் காகதாசபுரா பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் அபிலாஷ் டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் மாதன் 28ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, டெங்கு காயச்சல் தீவிரமாக பரவி வருவதால் அதை கட்டுப்படுத்தும் வகையில் மாநிலத்தில் டெங்குவை அவசர நிலையாக அறிவிக்கக் கோரி பெங்களூரு பாஜக எம்பியும் மருத்துவருமான சிஎன் மஞ்சுநாத் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பருவமழை தொடங்கி உள்ள நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு ஒழிப்பு உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.
மேலும், டெங்கு மற்றும் ஜிகா வைரஸ், மலேரியா உள்ளிட்ட கொசுக்களால் பரவுக் கூடிய நோய்களை கட்டுப்படுத்தவவும், இந்த நோய்கள் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் அரசு மருத்துவமனைகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் கர்நாடகாவில் டெங்குவுடன் சேர்ந்த ஜிகா வைரசும் பரவுவதாக கூறப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் டெங்கு மற்றும் ஜிகா வைரஸ் பரவுல் குறித்து மக்கள் போதிய விழுப்புணர்வு ஏற்படுத்துமாறும், தேங்கிய இடங்களில் உள்ள நீரை உடனடியாக அப்புறப்படுத்துமாறும் அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: குஜராத் அடுக்குமாடி குடியிருப்பு விபத்தில் 7 பேர் பலி! தொடர் மீட்பு பணியால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்! - Gujarat Building Collapse