டெல்லி: நாடு முழுவதும் இன்று தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு (அக்டோபர் 30) தனது எக்ஸ் பக்கத்தில் தீபாவளி வாழ்த்துகள் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் அவர், "ராம் லல்லாவின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு அயோத்தி கோயில் கொண்டாடும் முதல் தீபாவளியாகும்.”
ராமாயண திருநாளில் அயோத்தி ராமர் கோயில்: “இந்த தருணம் 500 ஆண்டுகளுக்கு பின் நமக்கு கிடைத்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புடைய நாளுக்கு பின் எண்ணற்ற தியாகங்கள் மற்றும் தவங்கள் உள்ளன. இந்த வரலாற்று நிகழ்வில் நாம் அனைவரும் இணைந்திருப்பது நமது பாக்கியம்," எனக் குறிப்பிட்டிருந்தார்.
अलौकिक अयोध्या!
— Narendra Modi (@narendramodi) October 30, 2024
मर्यादा पुरुषोत्तम भगवान श्री राम के अपने भव्य मंदिर में विराजने के बाद यह पहली दीपावली है। अयोध्या में श्री राम लला के मंदिर की यह अनुपम छटा हर किसी को अभिभूत करने वाली है। 500 वर्षों के पश्चात यह पावन घड़ी रामभक्तों के अनगिनत बलिदान और अनवरत त्याग-तपस्या के बाद… https://t.co/e0BwDRUnV6
இந்தியாவின் வளர்ச்சிக்கு ராமரின் கொள்கை: மேலும் அந்த பதிவில், "அயோத்தி ராமர் கோயில் அறத்தினால் உருவானது. இந்த கோயிலில் வீற்றிருக்கும் ராம் லல்லாவின் தனித்துவமும், அழகும் அனைவரையும் கவரும். இந்தியாவின் வளர்ச்சிக்கு ராமரின் வாழ்க்கையும் அவரது கொள்கையும் மிக பெரிய உத்வேக சக்தியாக உள்ளது. அதுவே தொடரும் என நான் நம்புகிறேன்" என தெரிவித்து இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி தீபஒளித் திருநாள் வாழ்த்துகளைக் கூறினார். மேலும், அந்த எக்ஸ் பதிவில் ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் எக்ஸ் பக்கத்தை குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: தீபாவளி 2024: 25 லட்ச தீபங்கள்; இரண்டு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்திய அயோத்தி!
விளக்குகளால் ஒளிரும் அயோத்தி ராமர் கோயில்: இதேபோன்று பிரதமர் மோடி வெளியிட்டுள்ள மற்றோரு எக்ஸ் தள பதிவில், "தீபாவளி கொண்டாட்டத்தில் ஜொலிக்கும் அயோத்தி ராமர் கோயிலின் புகைப்படத்தை பகிர்ந்து, அதற்கு கீழ், "தீபாவளி திருநாளில் தெய்வீக தன்மையுடன் மின்னும் அயோத்தி ராமர் கோயில். இங்கு ஒளிரும் விளக்குகள் அற்புதத்தை நமக்கு வழங்கியுள்ளது. இந்த காட்சிகள் கற்பனையில் கூட சிந்தித்துப் பார்க்க முடியாத அளவிற்கு பிரமண்ட காட்சியாகும்.”
अलौकिक अयोध्या!
— Narendra Modi (@narendramodi) October 30, 2024
मर्यादा पुरुषोत्तम भगवान श्री राम के अपने भव्य मंदिर में विराजने के बाद यह पहली दीपावली है। अयोध्या में श्री राम लला के मंदिर की यह अनुपम छटा हर किसी को अभिभूत करने वाली है। 500 वर्षों के पश्चात यह पावन घड़ी रामभक्तों के अनगिनत बलिदान और अनवरत त्याग-तपस्या के बाद… https://t.co/e0BwDRUnV6
வரலாற்று சிறப்பு மிக்க நாள்: "இங்கு இருக்கும் எண்ணற்ற விளக்குகளின் ஒளி நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு புத்துணர்ச்சி தரப் போகிறது. நம் அனைவரையும் வரலாற்றின் சாட்சிகளாக நிற்க வைத்துள்ளது. இது நம்மை சந்தோஷ கடலில் திளைக்க வைக்கும் நாளாகும்," எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்