அமராவதி (தெலங்கானா): மார்கதர்சி சிட் ஃபண்டின் சீதம்பேட் கிளை ஊழியரிடம் இருந்து ஏப்ரல் 2ஆம் தேதி வாடிக்கையாளர்களின் பணம் ரூ.51,99,800 மற்றும் 51 நபர்களின் காசோலை ரூ.36,88,675 ஆகியவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், தற்போது விசாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் அந்த பணம் மற்றும் காசோலை ஆகியவற்றை நிர்வாகத்திடம் திருப்பி அளித்துள்ளது.
இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்த நிலையில், மார்கதர்சி சிட் ஃபண்ட் ஊழியர் மார்ச் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வசூல் செய்த பணத்தினை, ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி விடுமுறை என்பதால் ஏப்ரல் 2ஆம் தேதி வங்கியில் செலுத்தச் சென்ற போது, பணத்தினை சோதனைக்குழு பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து, மார்கதர்சி ஊழியர் இது குறித்து சோதனைக் குழுவிடம் விளக்கியும் அதனை அவர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.
இதனையடுத்து, பணம் வசூல் செய்யும் தினசரி பணப் பதிவேடு சோதனைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், அதனை ஏற்க மறுத்துள்ளனர். இதனையடுத்து, வருமான வரித்துறை மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மார்கதர்சி நிர்வாகம் முறையிட்டது. மேலும், வாடிக்கையாளர்களின் விவரம், வங்கி பரிவர்த்தனைகள் உட்பட அனைத்து ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.
இதனையடுத்து ஆதாரங்களை ஆய்வு செய்த வருமான வரித்துறையினர், பணம் மற்றும் காசோலைகள் பறிமுதல் செய்ததது தவறு என தெரிவிக்கப்பட்டது. மேலும் வருமான வரித்துறை இணை இயக்குனர் எம்.ராஜீவ் ரமேஷ் மார்கதர்சி சிட் ஃபண்டின் பணம் மற்றும் காசோலைகளைத் திரும்ப ஒப்படைக்கக் கோரி கடிதம் ஒன்றை ஏப்ரல் 17ஆம் தேதி எழுதினார். ஆனால் 20 நாட்களுக்குப் பின்னர் மே 6ஆம் தேதியே மாவட்ட நிர்வாகம் பணம் மற்றும் காசோலைகளைத் திரும்ப ஒப்படைத்தது.
தவறான செய்தி வெளியிட்ட சாக்ஷி மீடியா: தேர்தல் விதிகளுக்கு எதிராக மார்கதர்சி நிர்வாகம் பணம் மற்றும் காசோலைகள் கொண்டு சென்றதாக ஜெகன் மோகன் ரெட்டி குடும்பத்தைச் சேர்ந்த சாக்ஷி ஊடகம் தவறான தகவல்களை வெளியிட்டு மார்கதர்சி நிர்வாகத்தின் நன்மதிப்பை குறைக்கும் வேலையைச் செய்ததது.
காவல்துறையினர் சோதனையின் போது உரிய ஆதாரங்களை நிர்வாகம் சமர்ப்பிக்கவில்லை எனவும், பெரிய கட்சியின் வேட்பாளர்களுக்கு அந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாகவும் ஆதாரமற்ற மற்றும் பொய்யான செய்திகளை வெளியிட்டது. இதன் மூலம் மார்கதர்சி வாடிக்கையாளர்களிடம் தவறான கருத்துகளை உருவாக்க சாக்ஷி மீடியா முயற்சி செய்தது.
தற்போது வருமான வரித்துறையினர் பணம் மற்றும் காசோலைகளை மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைக்கக் கூறியது. சாக்ஷி மீடியா வெளியிட்ட அனைத்து செய்திகளும் தவறானது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனம் வாடிக்கையாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் முறையாக அர்ப்பணிப்புடன் செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'சவுக்கு' சங்கர் என்கிற ஆச்சிமுத்து சங்கர்... அரசு ஊழியர் முதல் அரசியல் சர்ச்சைகள் வரை! - Savukku Shankar Bio