டெல்லி: டெல்லியில் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்றிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் புதிதாக பிறந்த 6 குழந்தைகள் உயிரிழந்தனர். இதில், மேலும் ஐந்து குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், மற்றொமொரு குழந்தை உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர் ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், மருத்துவமனை முற்றிலுமாக எரிந்து நாசமாகின. இந்த விபத்துக்கான காரணம் என்ன? என்று எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், சிலிண்டர் வெடித்ததாகவும் அதனால் தான் இவ்விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, பலத்த சத்தத்துடன் இந்த வெடி வெடித்ததைப் போன்று சத்தம் கேட்டதாகவும் அப்பகுதியினர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மருத்துவமனைக்குள் சிக்கியிருந்த புதிதாக பிறந்த 11 பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தீ விபத்துக்கான காரணம் விசாரணைக்கு பிறகே தெரியவரும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். எனினும், பலத்த வெடி சத்தத்துடன் தீ பரவியதாக நேரில் பார்த்தவர்கள் கூறியதாக தெரியவருகிறது.
இது தொடர்பாக டிஎஃப்எஸ் தலைவர் அதுல் கர்க் கூறுகையில், 'இந்த பயங்கர விபத்தைத் தொடர்ந்து, மருத்துவமனையில் மீட்புப் பணி இன்னும் நடக்கிறது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. "விவேக் விஹார் பகுதியின் ஐடிஐ, பிளாக் B-க்கு அருகில் உள்ள குழந்தை பராமரிப்பு மையத்திலிருந்து இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்தது. மொத்தம் ஒன்பது தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கும் பணிக்காக விரைந்துள்ளன" என்று கூறினார்.
இதுகுறித்து தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'டெல்லியின் விவேக் விஹாரில் அமைந்துள்ள பேபி கேர் மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு 11:32 மணியளவில் தீப் பற்றியதாக தகவல் கிடைத்தது. சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது' என்று தெரிவித்தார்.
இந்த கோர விபத்து நடந்த சம்பவ இடத்திற்கு டெல்லி சட்டப்பேரவை சபாநாயகரும், அப்பகுதி எம்எல்ஏவுமான ராம்நிவாஸ் கோயல் உடனடியாக வந்தார். இது குறித்து பேசிய பகத் சிங் சேவா தளத்தின் தலைவர் ஜிதேந்திர சிங் சாந்தி மற்றும் உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், 'இந்த விபத்துக்கு முன்பு, பயங்கர சத்தம் கேட்டது. மருத்துவமனைக்கு வெளியே ஆம்புலன்ஸ்களில் ஆக்சிஜன் நிரப்பிக் கொண்டு இருந்தபோது, இவ்விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், அப்போது ஆக்ஸிஜன் நிரப்பிய போது மூன்று சிலிண்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்து சிதறின. இதன் காரணமாக முதலில் மருத்துவமனையில் தீப்பிடித்ததாகவும், பின்னர் அருகில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ராஜ்கோட் விளையாட்டு வளாகத்தில் பயங்கர தீ விபத்து; குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழப்பு! - Rajkot Fire Accident