ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் மகுடம் சூடப்போவது யார்? இந்தியா கூட்டணி 28 தொகுதிகளில் முன்னிலை! - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

Maharashtra Election Result 2024: இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில் ஜூலை 4 ஆம் தேதியான இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டு இருக்கின்றன.

காங்கிரஸ் சின்னம் கோப்பு புகைப்படம்
காங்கிரஸ் சின்னம் கோப்பு புகைப்படம் (Credit - Etv Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 4, 2024, 4:31 PM IST

மும்பை: 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதனையடுத்து மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன்.4) காலை முதலே எண்ணப்பட்டு வருகின்றன. மதியம் 1 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களிலும், 'இந்தியா' கூட்டணி 190க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

மகாராஷ்டிரா தேர்தல்: மத்தியில் யார் ஆட்சி செய்யப் போகும் அரசியல் கட்சி யார் என்பதை நிர்ணயிக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு முக்கிய பங்கு உள்ளது காரணம். இந்தியாவில் அதிக எம்பி தொகுதிகளை மாநிலங்களில் உத்தரப்பிரதேசத்திற்கு(80) அடுத்தபடியாக 48 தொகுதிகளை கொண்டுள்ளது மகாராஷ்டிரா.

இங்கு தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய இரண்டு கட்சிகளுக்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக இந்த இரண்டு கட்சிகளும், இரண்டாக உடைந்தன, இதனால் சின்னங்கள் மாறியது. இந்த கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் 18வது நாடாளுமன்ற தேர்த்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

மொத்தம் உள்ள 48 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் 61.33 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் பாஜக 28 இடங்களிலும், ஷிண்டே சிவசேனா 14 இடங்களிலும், அஜித் பவார் தலைமையிலான என்சிபி 5 இடங்களிலும் போட்டியிட்டன. காங்கிரஸ் கூட்டணியில் 21 இடங்களை உத்தவ் தாக்கரே சிவசேனாவுக்கு (UBT) காங்கிரஸ் கட்சிக்கு 17 மற்றும் தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் (SP) கட்சிக்கு 10 இடங்களும் போட்டியிட்டன.

என்.டி.ஏவை முந்திய இந்தியா கூட்டணி: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 நாடாளுமன்றத் தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி இந்தியா கூட்டணி 28 இடங்களிலும், பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 19 இடங்களிலும் சுயோட்சையாக வேட்பாளர் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.

இதில் பாஜக கூட்டணி 12 இடங்களிலும், ஷிண்டே சிவசேனா 6 இடங்களிலும், அஜித் பவார் என்சிபி 1 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர். அதே போல் காங்கிரஸ் 11 இடங்களிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா 10 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் (SP)7 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர். இதனால் மொத்தம் 48 தொகுதிகளில் வெற்றி பெற போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

மத்திய அமைச்சர்கள் நிலை என்ன? மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் 5 லட்சத்து 10 ஆயிரத்து 555 வாக்குகள் பெற்று முதலிடம் வகிக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி சார்பாகப் போட்டியிட்ட பூஷன் பாட்டீல் 2 லட்சத்து 54 ஆயிரத்து 408 வாக்குகள் பெற்று பின்னடைவில் இருக்கிறார்.

அதே போல் நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டுள்ள மற்றொரு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி 5லட்சத்து 33ஆயிரத்து 186 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட விகாஸ் தாக்கரே 4 லட்சத்து 20 ஆயிரத்து 697 பெற்று பின்னடைவில் இருக்கிறார்.

இதையும் படிங்க: தெலுங்கானா யாருக்கு? காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி.. பிஆர்எஸ் நிலை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.