கேரளா, கர்நாடகா அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு & காஷ்மீர், மத்திய பிரதேசம் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று 2ஆம் கட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு (lok sabha election 2024 phase 2 polling) காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.
17வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜூன் 16ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதைத்தொடர்ந்து 18-வது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான நாடாளுமன்றத் தேர்தல் ஏப்.19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறத் தொடங்கியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் 2024, மார்ச் 16ஆம் தேதி அறிவித்த படி, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 102 தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில், தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவாகின.
இதைத்தொடர்ந்து, கேரளா, கர்நாடகா அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு & காஷ்மீர், மத்திய பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.