டெல்லி: நாடு முழுவது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதில் ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளுக்கு 4வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், 3 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 52.60 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 66.05 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
குறைந்தபட்சமாக ஜம்மு காஷ்மிரில் 29.93 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மற்றபடி, ஆந்திரப் பிரதேசத்தில்- 55.49 சதவீதமும், பீகாரில்- 45.23 சதவீதமும், ஜம்மு மற்றும் காஷ்மீரில் - 29.93 சதவீதமும், ஜார்கண்ட் மாநிலத்தில் - 56.42 சதவீதமும், மத்தியப் பிரதேசத்தில் - 59.63 சதவீதமும், மகாராஷ்டிராவில் - 42.35 சதவீதமும், உத்தர பிரதேசத்தில் 48.41 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 66.05 சதவீதமும், ஒடிசாவில் 52.91 சதவீதமும், தெலங்கனாவில் 53.34 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தவிர 175 சட்டப்பேரவைகளை கொண்ட ஆந்திர பிரதேசத்திற்கும், ஒடிசாவில் முதற்கட்டமாக 28 சட்டப் பேரவைகளுக்கும் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மதியம் 3 மணி நிலவரப்படி ஆந்திர பிரதேசத்தில் 55.49 சதவீத வாக்குகளும், ஒடிசாவில் 52.91 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் மக்களவை தொடர்ந்து மாநில சட்டமன்றத்திற்கு வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை முதலே திரைப்பிரபலங்கள், பல் துறை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் அல்லு அர்ஜூன், ராம் சரண் தனது மனைவியுடன் வாக்களித்தனர். மேலும், சீரஞ்சீவி உள்ளிட்ட பல்வேறு சினிமா பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் ஆர்வமாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றன்ர்.
இதையும் படிங்க: 4வது கட்ட மக்களவை தேர்தல் 2024: 1 மணி நிலவரப்படி 40.32% வாக்குகள் பதிவு! - Lok Sabha Election 2024